Tuesday, March 31, 2015

ஜம்வு கஸ்ர் தொழுகை என்றால் என்ன ? அதை எப்படி தொழுவது?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...!
ஜம்வு கஸ்ர் தொழுகை என்றால் என்ன ? அதை எப்படி தொழுவது?
கடமையான தொழுகைகளை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம்...!!
இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும் நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கி தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்...!!
ஒருவர் சுமார் 25 கி.மீ தொலைவுக்கு பயணம் செய்தால் அவர் ஜம்வு கஸ்ர் செய்யலாம்....!!
யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”மூன்று மைல்” அல்லது ”மூன்று ஃபர்ஸக்” தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள். இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களே (”மூன்று மைல்கள்” அல்லது ”மூன்று ஃபர்ஸக்” என) ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முஸ்லிம் அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்....!!
மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ ஆகும்.
மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். நபி (ஸல் ) அவர்கள் மக்கா புறப்பட்டார்கள்(இடையில் உள்ள ஊரான) துல்ஹுலைஃபவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்....!!
அறிவிப்பவர்: அனஸ் (ரலி )
புகாரி 1089,முஸ்லிம் 1228
பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹரையும், அஸரையும் சேர்த்து லுஹருடைய நேரத்தில் தொழலாம் அதேபோல் லுஹரையும், அஸரையும் சேர்த்து அஹருடைய நேரத்தில் தொழலாம்...!!
அதேபோல் மஃரிப், இஷா ஆகிய இரு தொழுகைகளையு மஃரிப் அல்லது இஷாவுடைய நேரத்தில் தொழலாம்....!!
அப்போது லுஹர்,அஸர்,இஷா ஆகிய நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம்.. ஆனால் மஃரிப் மற்றும் சுப்ஹுத் தொழுகைகளை முழுமையாக தொழ வேண்டும்....!!
நபி (ஸல் ) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் மற்றும் இஷாவை சேர்த்து தொழுவார்கள் மஃரிப் மூன்று இஷா இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) முஸ்லிம் 2477..!
நபி (ஸல்) அவர்கள் சூரியன் சாய்வதர்க்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி இரண்டையும் சேர்த்து தொழுவார்கள் அதேபோல் பயணத்திற்கு முன் சூரியன் சாய்ந்து விட்டால் லுஹர் தொழுது விட்டு புறப்படுவார்கள்.
அனஸ் (ரலி) புகாரி 1111
நபி (ஸல்) அவர்கள் அவசரமாக புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் தொழுவார்கள்.  இப்னு உமர் (ரலி) புகாரி 1091
இரண்டு தொழுகைகளை சேர்த்து தொழும் போது இரண்டிற்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும்
ஒவ்வொரு தொழுகைகும் தனிதனியாக இகாமத் சொல்லி தொழ வேண்டும்...!!
நபி (ஸல்) அவர்கள் மஃரிப் மற்றும் இஷாவையும் ஒரு பாங்கு இரண்டு இகாமத் சொல்லி தொழுதார்கள்.  ஜாபிர் (ரலி) முஸ்லிம் 2334..
சுருக்கித் தொழுவது கட்டாயம் இல்லை முடிந்தால் முழுமையாகவும் தொழலாம்...!!
ஒருவர் உள்ளூரில் இருக்கும் போது எப்போதாவது ஜம்வு செய்து தொழுவதற்கு அனுமதி உள்ளது எனினும் இதையே வழக்கமாக்கி கொள்ள கூடாது...!!
நபி (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் அதேபோல் மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இல்லை...  இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம் 1267.
பிறருக்கு இதை எத்தி வையுங்கள்.. இன்ஷா அல்லாஹ், இறைவன் உங்களுக்கு கூலி கொடுப்பான்..

No comments:

Post a Comment