Saturday, April 11, 2015

இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனீபா மறைவு

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்…
தமிழ் இசை உலகின் ஜாம்பவான் இசைமுரசு ஈ.எம்.ஹனீபா தமது வெண்கல குரலில் இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டும் பல்வேறு சரித்திர நிகழ்வுகளையும் கூட பாடல்களாக பாடி தமிழகம் மட்டுமல்லாமல் உலகில் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்.

தமிழகத்தின் கிராமம் முதல் நகரம் வரை ஈ.எம்.ஹனிபா அவர்களின் கால் பதியாத ஊர்கள் என்பதே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மேடை கச்சேரி நடத்தியவர்.
இறைவனிடம் கையேந்துங்கள்….அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.என்ற பாடலின் மூலம் இறைவன் மீதான அடியார்களின் நம்பிக்கையை பிரதி பலித்தவர்.
பெரியார் பிலாலின் தியாக வாழ்வை சொல்லுவேன் இதோ…..பிரியாத அன்பு பூண்டனர் பெருமானார் மீதிலே…என்ற பாடலின் மூலம் பிலால்(ரலி)அவர்களின் சரித்திரத்தை ஒவ்வொரு முஸ்லிம்களின் உள்ளத்திலும் ஆழமாய் பதிய வைத்தவர்.
இன்னும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பாடல் மூலம் தமிழ் முஸ்லிம்களின் உள்ளத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்ட பெரியவர் நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும் என்பதை நினைவுறுத்தும் இவ்வேளையில்,
பெரியவரின் பிழைகளை மன்னித்து அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துகிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஸப்ரன் ஜமீல் என்னும் பொறுமையை இறைவன் கொடுக்கவும் துஆ செய்து நம் மஹல்லாஹ் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் 

No comments:

Post a Comment