Friday, June 19, 2015

புனித ரமலான் நோன்பு தொடங்கியது: பள்ளிவாசல்களில் நடைபெற்ற தராவீஹ் தொழுகை!

தமிழகத்தில் புனித ரமலான் நோன்பு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்கியது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் வெளியிட்டார்.
இதையடுத்து, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் இன்று (18.06.2015) பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் இஷா தொழுகைக்கு பின் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் மாதம் தொடங்குவதற்கான பிறை தெரிந்ததைத் தொடர்ந்து நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தப் பிறை வியாழக்கிழமை இரவு தெரிந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை ரமலான் நோன்பு தொடங்குகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கப்பட்ட பிறகு, அந்த மாதம் முடிவது அதற்கான பிறை தெரிவதை வைத்தே கணக்கிடப்படுகிறது. இதன் பிறகு, ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

No comments:

Post a Comment