Sunday, July 5, 2015

ரமலான் பிறை 17 "பத்ரு" போர் நடந்த நாள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
ரமலான் பிறை 17 இஸ்லாமியர்கள் யாரும் மறக்க முடியாத " பத்ரு" போர் நடந்த நாள்.
313 ஸஹாப்பாக்கள் உயிரை துச்சமாக மதித்து, மார்க்கத்துக்காக போர் செய்த நாள்.

A K Shahul Hameed's photo.
அதில் உயிர் நீத்த 14 தியாகிகளையும், இறைவனே, ஷுஹதாக்கள் எனப்படும் தியாகிகளை பற்றி பல்வேறு வகையில் சிறப்பித்துள்ளான்.
அந்த 14 ஷுஹதாக்களின் பெயர்களும், கீழே தரப்பட்டுள்ளது.
1.அப்துல் முன்கதிர் உடைய மகன் முபஷ்ஷிர் ( ரலியல்லாஹு அன்ஹு )
2.முஅல்லா உடைய மகன் ரபீக்உ ( ரலியல்லாஹு அன்ஹு )
3.ஹாரிஸ் உடைய மகன் யஜீது ( ரலியல்லாஹு அன்ஹு )
4.கய்சமா உடைய மகன் சஃது ( ரலியல்லாஹு அன்ஹு )
5.ஹாரிது உடைய மகன் உபைதா ( ரலியல்லாஹு அன்ஹு)
6.புகைரு உடைய மகன் ஆகில் ( ரலியல்லாஹு அன்ஹு )
7.ஹுமாம் உடைய மகன் உமைர் ( ரலிஅல்லாஹு அன்ஹு )
8.ஹாரிஸ் உடைய மகன் முஅவ்விது ( ரலியல்லாஹு அன்ஹு )
9.அம்து அம்ரு உடைய மகன் திஷ்ஷிலைமான் ( ரலியல்லாஹு அன்ஹு )
10.சாலிஹ் உடைய மகன் மிஹ்ஜா ( ரலியல்லாஹு அன்ஹு )
11.அபூவக்காஸ் உடைய மகன் உமைர் ( ரலியல்லாஹு அன்ஹு )
12.சுராக்கா உடைய மகன் ஹாரிஸா ( ரலியல்லாஹு அன்ஹு )
13.வஹப் உடைய மகன் சஃப்வான் ( ரலியல்லாஹு அன்ஹு )
14. ஹாரித் உடைய மகன் அவ்ஃப் ( ரலியல்லாஹு அன்ஹு )
பொய்க்கும், மெய்க்கும் இடையில் நடந்த முதலில் ஷஹீதானவர்கள்.
போர்களத்தின் பாதை கரடு முரடானது.
சுட்டெரிக்கின்ற வெயில்.
தீக்கங்குகளாக பாறை.
உள்ளங்கால்களில் கொப்புளங்கள்.
நோன்பு விதியாக்கப்பட்ட முதல் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருந்தார்கள்.
5 நேர தொழுகை, தராவீஹ் தொழுகை, திக்ரு, பிக்ரு எதுவும் குறையவோ, தவறவோ இல்லை.
கொஞ்சம் பேரிச்சம் பழங்களும், சிலமிடறு தண்ணீரும்தான்
" ஸஹர்" உணவு.
இவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை, சிறப்பு உண்டு என்பதை,
இறைமறையும்,
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் ) அவர்களின் பொன்மொழிகளும் உறுதிபடுத்துகின்றது.
தொழுகை, நோன்பு, ஜக்காத்து, ஹஜ் எப்படி பர்ளாக இருக்கின்றதோ, அதே போல்,
நாயகம் ( ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் ) அவர்கள் மீது பிரியம் வைப்பதும்,
ஸுஹதாக்கள், சஹாபாக்கள்,
மீதும் பிரியம் வைப்பதும் பர்ளாகும்.
வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ஹிதாயத்தயும்,தௌபீக்கையும் தந்தருள்வானாக.
ஆமீன்..ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.
யா அர்ஹமர் ராஹிமீன்

No comments:

Post a Comment