நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் யுக முடிவு (கியாமத்) நாளின் சமீபத்தில் 72 அடையாளங்கள் வரும்...(அவை)
1.தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள்.
2.அமானிதப் பொருட்களை வீணாக்கி விடுவார்கள். அதாவது அமானிதப் பொருள்களைக் கொடுத்து வைத்திருந்தால் அதில் மோசடி செய்வார்கள்.
3.வட்டியைச் சாப்பிடுவார்கள்.
4.பொய்யை (ஹலாலாக) ஆகுமாக்கி விடுவார்கள். அதாவது பொய்யை ஒரு கலையாக சாமர்த்தியமாக நினைப்பார்கள்.
5.கட்டிடங்களை உயர உயரமாக கட்டுவார்கள்.
6.உலக ஆதாயங் களுக்காக மார்க்கத்தை விற்பார்கள்.
7.இலேசன விஷயத்திற் கெல்லாம் கொலை செய்வார்கள்.
8.உறவினர்களை துண்டித்து வாழ்வார்கள்.
9.தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
10.பொய் உண்மையாகும்.
11.ஆண்கள் பட்டாடை அணிவார்கள்.
12.அநீதி பெருகிவிடும்.
13.விவாகரத்து (தலாக்) அதிகமாகிவிடும்.
14.திடீர் மரணம் அதிகமாகிவிடும்.
15.மோசடிக்காரர்களை மக்கள் நம்பிக்கையாளர்கள் என நினைப்பார்கள்.
16.நம்பிக்கையாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.
17.பொய்யனை மெய்யனாக ஆக்குவார்கள்.
18.மெய்யனைப் பொய்யனாக ஆக்குவார்கள்.
19.அவதூறுகள் (வீண்பழிகள் சுமத்துவது) பரவலாகிவிடும்.
20.மழை பொழியாது.
21.குழந்தைகள் அதிகம் பெற்றெடுப்பதை வெறுப்பார்கள்.
22.தகுதி குறைந்தவர்கள் உயர்ரக வாழ்க்கை வாழ்வார்கள்.
23.கண்ணியத்திற் குறியவர்கள் வசதி வாய்ப்பின்றி வாழ்வார்கள்.
24.தலைவர்களும், மந்திரிகளும், பொய்யர்களாக இருப்பார்கள்.
25.நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட மோசடி செய்வார்கள்.
26.பொறுமை யாளர்கள் அநீதம் புரிவார்கள்.
27.குர்ஆனை ஓதிக் கொண்டே பாவங்கள் செய்வார்கள்.
28.மக்கள் மிருகங்களின் தோலினாலான ஆடையை அணிவார்கள்.
29.இவ்விதம் உயர்ரக ஆடைகளை அணிந்தாலும் அவர்களின் உள்ளங்கள் செத்த பிணங்களைவிட மிக மோசமானதாக இருக்கும்.
30.விஷத்தை விட கசப்பான தாகவே இருக்கும்.
31.தங்க பயன்பாட்டில் இருக்கும்.
32. வெள்ளி (பயன்டுத்துதல்) குறைந்து விடும்.
33.பாவமான செயல்கள் அதிகமாகிவிடும்.
34.பாதுகாப்பு குறைந்துவிடும்.
35.குர்ஆன் பிரதிகள் அலங்கரிக்கப்படும்.
36.பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்படும்.
37.மினராக்கள் உயர உயரமாக கட்டுவார்கள்.
38 மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
39.மதுபானங்கள் அருந்தப்படும்.
40.குற்றங்களுக் குறிய ஷரீஅத் தண்டனைகள் நிறைவேற்றப்படாது.
41. அடிமைபெண் (தனக்கு கட்ளையிடும்) எஜமானியைப் பெற்றெடுப்பாள்.
(அதாவது பெண்மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழிநடத்துவார்கள்)
(அதாவது பெண்மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழிநடத்துவார்கள்)
42.செருப்பில்லாமல் நடப்பவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள் கூட தலைவர்களாக ஆகிவிடுவார்கள்.
43.கணவருடன் மனைவி வியாபாரத்தில் ஈடுபடுவாள்.
44.ஆண்கள் பெண்களைப் போன்று நடிப்பார்கள்.
45.பெண்கள் ஆண்களைப் போன்று நடிப்பார்கள்.
46.அல்லாஹ் அல்லாத உலக வஸ்துக்களின் மீது சத்தியம் செய்வார்கள்.
47.முஸ்லிம் பொய் சாட்சி கூறத் தயாராகி விடுவான்.
48.அறிமுகம் உள்ள வர்களுக்கு மட்டும் ஸலாம் கூறுவார்கள்.
49.தீனுக்காக அல்லாமல் உலக ஆதாயத்திற்காக கல்வி கற்பார்கள்.
50.மறுமையுடைய செயலைச் செய்து உலகத்தை சம்பாதிப்பார்கள்.
51.கனீமத் பொருட்களை தங்கள் தங்கள் சொந்தப் பொருள்களைப் போன்று பயன்படுத்துவார்கள்.
52.அமானிதப் பொருள்களை போரில் கிடைத்த (கனீமத்) பொருளைப் போன்று எடுத்துக் கொள்வார்கள்.
53.ஜகாத் கொடுப்பதை அபராதமாக நினைப்பார்கள்.
54.கூட்டத்தில் இழிவுக்குறியவன் அவர்களுக்குத் தலைவராகி விடுவான்.
55.மகன் தந்தையை நோவினை செய்வான்.
56.தனது தாயை வெறுத்து விடுவான்.
57.தனது நண்பனுக்கு கேடுசெய்வான்.
58.கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான்.
59.தீயவர்களின் சப்தம் பள்ளிவாசல்களில் அதிகமாகிவிடும்.
60.பாட்டுப் பாடும் பெண்கள், கண்ணியம் செய்யப்படுவார்கள்.
61.இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.
62.நடக்கும் பாதைகளில் மதுபானங்கள் அருந்துவார்கள்.
63.அக்கிரமம் செய்வதைப் பெருமையாகக் கருதுவார்கள்.
64.மக்கள் நீதத்தை லஞ்சம் கொடுத்து மாற்றுவார்கள்.
65.காவலர்கள் அதிகமாக இருப்பார்கள்.
66.இசையைப் போன்று குர்ஆனை ஓதுவார்கள்.
67.விலங்கினங் களின் தோலைப் பயன்படுத்து வார்கள்.
68.பிற்காலத்தவர் முற்காலத்தவர்களைத் திட்டுவார்கள், சாபமிடுவார்கள், பின்பு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இத்தகைய பாவங்கள் ஏற்படும் போது எதிர் பாருங்கள்.
69.சிகப்பு சூறாவளி காற்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து வீசும்.
70.பூகம்பம் ஏற்படும்.
71.வானத்திலிருந்து கல்மாரி பொழியும்.
72. மனிதர்களின் உருவங்களை உருமாற்றம் செய்யப்படும் மற்றும் பல அடையாளங்கள் நிகழும்.
🔖அறிவிப்பவர் :- ஹுதைபா (ரலி) ஆதரநூல்கள் : -துர்ருல் மன்சூர். பக்கம் :-56. பாகம்
No comments:
Post a Comment