Thursday, July 16, 2015

பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....!!!!

பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....!!!!
அல்ஹம்துலில்லாஹ்....
இதோ கண்ணியமிக்க ரமலானின் இறுதி நாளை அடைந்து விட்டோம்....
1) உங்கள் மாற்று மத நண்பர்களை உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் விருந்தோம்பல் மூலமாய் அவரை மகிழ்விப்பதொடு, இஸ்லாம் குறித்தும் சில விசயங்களை அவருக்கு விளக்க (தாவா செய்ய) உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்...
2) முடிந்தவரை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பகிருங்கள்...
3) உங்கள் இரத்த பந்த உறவினர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்ய முயலுங்கள்...
4) பெருநாள் தொழுகைக்குப் பின் உணவு, பிறகு நல்ல தூக்கம், பின் பொழுது போக்கு அல்லது தொலைக்காட்சி என்பதுதான் உங்கள் அஜெண்டா என்றால், அப்படிப்பட்ட நிலையில் இருந்து மாறி பயனுள்ள வகையில் இந்த நல்ல நாளை செலவழிக்கு திட்டமிடுங்கள்...
5) வெறும் புத்தாடை அணிதலும் மாமிச உணவு சாப்பிடுதலும் மட்டுமே பெருநாளின் அடிப்படை அடையாளம் அல்ல என்பதை உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் அழகான முறையில் எத்தி வைக்க முயலுங்கள்...
6) உங்கள் பெற்றோரோடும் சில மணி நேரங்களை செலவழியுங்கள்..
.
இதன் மூலம் அவர்களின் மலரும் நினைவுகளை அவர்களிடம் இருந்து வெளிக் கொணருங்கள். அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் இதன் மூலம் நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் பெறக்கூடும்...
7) நீங்கள் விருந்து சமைக்கிறீர்கள் என்றால், அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம் சுகாதாரம் காக்கப்படுவதோடு, உங்கள் அண்டை வீட்டாருக்கு மன சங்கடங்கள் எதுவும் நேராமலிருக்கும்...
8) பெருநாள் தொழுகையிலும், பர்ளு தொழுகையிலும் உலக முஸ்லிம்களுக்காகவும், தேச மற்றும் சர்வதேச அமைதிக்காகவும் துவா செய்யுங்கள்.
உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல் நிலைத் தன்மை நிலவவும், நீதிமிக்க -ஜனநாய ரதியிலான ஆட்சி மலரவும் வேண்டி இரு கரம் ஏந்தி மனமுருகி பிரார்த்தனை புரியுங்கள்..
9) தேவையற்ற விவாதங்களை தவிருங்கள். நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களில் எவரெல்லாம் இந்த ஆண்டு உம்ரா சென்றுள்ளார்களோ, அவர்கள் அனைவரின் உம்ராவும் ஏற்றுக் கொள்ளப்படவும், அவர்களின் நல்ல பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படவும் வேண்டி இறைவனிடம் மன்றாடுங்கள்...
மேலும் இப்படிப்பட்ட பயணங்களின் மூலம் சர்வதேச அளவில் சகோதரத்துவமும் மறுமலர்ச்சியும் ஏற்படவும் இறைவனை வேண்டுங்கள்.
10) இறுதியாக முகம் அறியா என்னையும் உங்கள் துவாவில் நினைவில் வையுங்கள்...
நம் குடும்பத்தாரோடு நாம் மகிழ்ந்து இருக்கிற இந்த நல்ல நாளில், நம் உற்றார் உறவினரோடு அன்பையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்து மகிழும் இந்த நல்ல நாளில், இந்த ரமலானின் செய்தியை, நம்மோடு வாழும் நம் மாற்று மத சகோதரர்களோடும் பகிர்ந்து கொள்ள சிறிது முயற்சி செய்தால் அது மிகப் பெரிய அழைப்புப் பணிகளில் ஒன்றாகவும், சிறந்த பலனை தரக்கூடிய ஒன்றாகவும் அமையக் கூடும்...

No comments:

Post a Comment