Thursday, July 23, 2015

நோன்பின் மாண்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நோன்பு சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை குறைக்கிறது என்றும் முதுமையை தாமத படுத்துகிறது என்றும் கலிபோர்னியாவைச சார்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியபட்டுள்ளது
நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் நடைமுறைபடுத்தும் உணவு அமைப்பை பற்றி ஆய்வு செய்த அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவை சார்ந்த ஆய்வாளர்கள் நோன்பிற்காக முஸ்லிம்களிடம் பின்பற்றபடும் உணவு நடைமுறையில் பல பயன்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்
ஆம் நோன்பு காலத்தில் இப்தார் என்றும் சஹர் என்றும் இரு நேர உணவுகளை முஸ்லிம்கள் உண்ணுகின்றனர்
இந்த உணவு முறை முதுமையை தாமதபடுத்துவதாகவும் நீரழிவு நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை குறைப்பதாகவும் தெற்கு கலிபோர்னியாவை சார்ந்த ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்
மூன்று மாதங்களாக தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆய்வுக்கு பயன்படுத்த பட்டவர்களை இரு குழுக்களாக பிரித்தனர்
ஒரு குழுவினரை சாதாரண உணவு முறையிலும் மற்றொரு குழுவினரை நோன்பின் போது பின்பற்ற படும் உணவு அமைப்பிலும் பயன்படுத்தினர்
பிறகு இரு சாராரின் இரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்த போது சாதாரண அமைப்பில் உணவு உண்டவரை விட நோன்பின் அமைப்பில் உணவு உண்டவரின் இரத்தத்தில் சர்க்கரையின் தன்மைகள் குறைந்திருந்ததாகவும் முதுமையை தள்ளிபோடும் தன்மைகள் இருந்தாதகவும் புற்று நோய் அபாயத்தை குறைக்கும் தன்மைகள் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment