Saturday, September 26, 2015

ஹதீஸ்-இஹ்ராம் ஆடை அணிந்த நிலையில் மரணித்தோர் நிலை மறுமை நாளில் என்ன?

1268. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் அரஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. என அய்யூப் என்பவர் கூறுகிறார். வாகனம் அவரைக் கீழே வீழ்த்தியதால் அவரின் எலும்புகள் முறிந்து விட்டன என அம்ர் கூறுகிறார்.
எனவே, அவர் இறந்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள், “அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளில் கஃபனிடுங்கள்; அவருக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியாக் (லப்பைக் அல்லாஹூம்ம லப்பைக் லப்பைக் லாஷரி கல லபைக்...) கூறிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்

No comments:

Post a Comment