*ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். பொது குளியலறையில் ( குளிப்பது ) என் சமுதாயத்து பெண்களின் மீது ஹராமாகும்
அறிவிப்பவர் ஆயிஷா ( ரலி ) அவர்கள் நூல் : ஹாகிம் : 7784*
*உம்முதர்தா அவர்கள் கூறினார்கள் நான் பொது குளியலறையிலிருந்து வெளியே வந்தேன்..அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து நீ எங்கிருந்து வருகின்றாய் ? என கேட்டார்கள். பொது குளியலறையிலிந்து என்று சொன்னேன்...அப்போது அவர்கள் எவனது கையில் என் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக ! எந்த பெண் தன் ஆடைகளை தனது தாய்மார்களில் ஒருவரது வீடு அல்லாததில் களைகின்றாரோ அவள் தமக்கும் ரஹ்மானுக்கும் இடையேயுள்ள ஒவ்வொரு திறையையும் கிழித்து விட்டாள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் : 27086*
No comments:
Post a Comment