இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும்? என்ற விவாதம் நடத்தப்பட்டபோது. இந்தியப் பாராளுமன்றத்திற்குள் தமிழே! ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்! என்று முதல் முதலில் முழங்கிய பெருந்தகை.
நீங்கள் இசுலாமியர் ஆயிற்றே! ஏன் தமிழை ஆட்சி மொழியாகக் கேட்கிறிர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு, நான் அல்லா! என்று அழைப்பதற்கு முன்பே, அம்மா! என்று அழைத்தவன்.
இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்.
இந்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய உண்மையும் நேர்மையும் தூய்மையும் எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர் நமது ஐயா காயிதே மில்லத்.
No comments:
Post a Comment