Friday, August 25, 2017

ஹராமான, தடுக்கப்பட்ட, பாவமான காரியத்தைப் போன்ற செயல்களை செய்வது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
உங்களில் யாரேனும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஹராமாக அறிவிக்கப்பட்ட இரத்தம், பன்றியின் இறைச்சி, தாமாக செத்தபிராணிகள் மற்றும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்ட மாமிசத்தை உண்ண விரும்புவாரா?
அல்லது
இறந்த தனது சகோதரரது மாமிசத்தை உண்ண விரும்புவாரா?
கலிமா ஓதும் உங்கள் பதில் இல்லை என்றுதான் இருக்கும்!
ஆனால் மேற்கண்ட ஹராமான, தடுக்கப்பட்ட, பாவமான காரியத்தைப் போன்ற செயல்களை உங்களில் பலர் உங்களை அறியாமலேயே செய்து வருகிறீர் அதுதான்.

1) பிறர் கண்ணியத்தில் சர்வ சாதாரணமாக கை வைப்பதும்,
2)பொய்யான இட்டுக்கட்டப்பட்ட வதந்திகளை உலகாதாய இலாபத்தை ஈட்டும் நோக்கோடு சில கைக்கூலிகளால் அரங்கேற்றப்படும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை உண்மையென்று நம்பி அதை பரப்புவதுமாகும்.
அறிந்துக் கொள்ளுங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)
எனவே குர்ஆன் நபிவழி சுன்னத் முறைப்படி வாழும் தவ்ஹீத் கொள்கைச் சகோதரர் பிஜே-யாக இருக்கட்டும் அல்லது ஷிர்க் எனப்படும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பு கொள்கையை பின்பற்றும் சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி-யாக இருக்கட்டும் யார் மீதும் ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியை பரப்பாதீர்!
அவ்வாறு பரப்பினால் உங்களால் பதிக்கப்பட்டு மன உலைச்சலுக்கு உள்ளாகும் அந்த பாதிக்கப்பட்ட நபர் இம்மையில் அல்லாஹ்விடம் முறையிட்டால் அந்த பாதிக்கப்பட்ட நபர் உங்களுக்கு எதிராக செய்யும் துவா எனும் பிரார்த்தனையை அல்லாஹ் நிறைவேற்றாமல் இருக்கமாட்டான்!
அதே போன்று பாதிக்கப்பட்ட நபர் நாளை மறுமையில் மஹ்ஷரில் உங்களைப்பற்றி அல்லாஹ்விடம் முறையிட்டால் உங்கள் நிலை என்ன?
அன்றைய தினம் மீஸான் தராசில் உங்கள் நற்செயல் (தொழுகை, நோன்பு, ஜகாத், குர்பானி, ஹஜ், உம்ரா)களை அல்லாஹ் அவருக்குரிய பரிகாரமாக அளித்துவிட்டால் நீங்கள் மஹ்ஷரில் நன்மைகளை அழிந்துவிடுவீர் பின்னர் பாதிக்கப்பட்டவரது பாவச்செயல்களான (பொய், பித்தலாட்டம், புறம், கோபம், கோள்பேசியது.....) உங்கள் மீது சுமத்தப்பட்டு செய்யாத குற்றத்திற்கு நரகத்தில் தண்டிக்கப்படுவீர் என்பதை நினைவு கூறுங்கள்!
எனவே ஆதாரமற்ற அவதூறுகளை புறக்கணித்துவிடுங்கள் அவைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!
பாவம் செய்தவன் யாராக இருந்தாலும் அது சகோ. PJ யோ, சகோ. ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியோ, சகோ. பாக்கரோ, சகோ. இப்ராஹீம் காசிமியோ, சகோ. ஜவாஹிருல்லாஹ்வோ, சகோ.கமாலுதீன் மதனியோ அல்லது நீங்களோ அல்லது நானோ அல்லாஹ்வின் பிடியிலிருந்தும் கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க இயலாது!
அல்லாஹ் நிலையானவன், நீதிமான், நேர்மையாளன், மாலிக்குல் முல்க்!
இது எச்சரிக்கையே தவிர வேறொன்றுமில்லை!
இறைவா என் புறத்தில் உள்ள உனது அடியார்களிடம் ஒருவர் மீது ஒருவர் வீண்பழி அவதூறு பரப்புவதை கைவிடுமாறு எச்சரித்துவிட்டேன் இதற்கு நீயே சாட்சி மஹ்ஷரில் இதுபற்றிய விசாரணையில் என்னை குற்றம் பிடிக்காதிருப்பாயாக!
ஆமீன்
மூலம் : சிராஜ் அப்துல்லாஹ் 

No comments:

Post a Comment