Wednesday, August 30, 2017

அரஃபா நோன்பு

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.
இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்:முஸ்லிம்(2151)

No comments:

Post a Comment