Thursday, August 24, 2017

குர்பானியின் சட்டங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
🕋கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா
💢🐄குர்பானிப் பிராணியை *கிப்லாவை முன்னோக்கித்தான்* அறுக்க வேண்டும் என்று *கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்* எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் *பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது* என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே *எந்தத் திசை* அறுப்பவருக்கு *தோதுவாக* உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.
💢🐫சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் *குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது* போன்ற செயல்களைச் செய்கின்ற னர். *இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும்* . மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத *மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத்'தான* நடைமுறைகளாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.
*🐫பிராணியை அறுப்பதற்கு முன்பு* கூற வேண்டியவை
💢🐄பிராணியை அறுக்கும் போது *வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ* என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இது பற்றி *அபூதாவுத் பைஹகீ இப்னுமாஜா* ஆகிய நூற்களில் *ஒரு பலவீனமான ஹதீஸ* இடம் பெறுகிறது. ஆகயால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சஹீஹான *ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் சில வார்த்தைகளைக்* கூறியதாக உள்ளது.
*🕋அறுக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்)* என்று கூறி இவ்வணக்கத்தை நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்ளும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.
💢🔘நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் *கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும* கூறினார்கள்.
🗣அறிவிப்பவர் : *அனஸ்(ரலி)*    📚நூற்கள் : புகாரி(5565).

No comments:

Post a Comment