Thursday, August 17, 2017

ஹதீஸ் - மைய்யத்துக்கு கஷ்டமான கவலையான நேரம் எது?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 
நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகை விட்டு பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?
ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும் நேரம்
நபி(ஸல்): "இல்லை"
ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில் அடக்கி விட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.
நபி(ஸல்): "இல்லை
ஆயிஷா(ரலி): நீங்களே சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்
நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால், அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்தும் எலும்புகளிலிருந்தும் உயிர் பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த உடம்பு புண்ணாய் போய்விடுகிறது. எந்த மைய்யத்தும் அதை தாங்காது. அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன் சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது.
"என்னை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என் உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புண்ணாய் போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக நடந்துகொள்.என்னை இன்னும் நோகடித்து விடாதே எனக் கெஞ்சுகிறது" இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.


(மையத்து என்றால் நாம்தான்)அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை ஊற்றி விடாதே குளிர்ந்த நீரையும் ஊற்றி விடாதே.  எனது உடம்பு தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும் இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது

ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.என்னிடம் மெதுவாக நடந்து கொள்ளுங்கள்  எனக் கதறுகிறது.இச்சத்தத்தை மனிதர்களையும் ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும் கேட்கிறது.
அடுத்து கஃபனிடும்போது என்னை கவனமாக தூக்குங்கள், ஏற்கனவே கவலையில் நொந்து போயிருக்கிறேன் . தயவு செய்து என்னை கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது, கவலைபடுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற அவசரம் மய்யத்துக்கு கவலையாக அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது "என்னை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை கட்டிவிடாதீர்கள். முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை பார்க்க வேண்டும். இதற்குபின் இங்கு திரும்பி வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்" எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
என்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே... நாம் மரணத்தை அடிகடி நினைப்பது அமல் செய்வதை லேசாக்குகிறது. தொழுகையை லேசாக்குகிறது. குர்ஆன் ஓதுவதை லேசாக்குகிறது. நம் குடும்பத்தை நேரான வழியில் நடத்துவதை லேசாக்குகிறது. ஹராமை விட்டும் ஹராத்தை விட்டும் தவிர்ப்பதை லேசாக்குகிறது.
இன்ஷா அல்லா நம் மரணமும் லேசாகும். நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக..
நம் பாவங்களை மன்னிப்பானாக..
கப்ரின் வேதனையை விட்டு நீக்கியருள்வானாக..
ஆமீன்.
நன்றி  : Ashfukutty Dreamss

2 comments:

  1. தயவுசெய்து ஹதீஸ்களுக்கு ஆதாரதோட பதிவிடவும்

    ReplyDelete