سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
🗣 கேள்வி : ஸலவாத் எப்படி கூறுவது ?
{நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறிவோம் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி (ஸல்) அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில்கூறுவது! முழு ஸலவாத்தைக்கூற வேண்டுமா? அல்லது வெறுமனே ஸல்லலாஹூஅலைஹிவஸல்லம் என்று கூறினால் போதுமா ?}
✍ பதில் :
♨ தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
♨ ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் முன்னால் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் தொழும் போது எங்கள் தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது? ஸல்லல்லாஹு அலைக்க என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தனர். பின்னர் நீங்கள் என் மீது ஸலவாத் கூறும் போது அல்லாஹும்ம் ஸல்லி அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்தஅலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ வலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என விடைஅளித்தார்கள்.நூல் : அஹ்மத் 16455
♨ கேள்வி கேட்ட மனிதர் தொழுகையின் போது ஸலவாத் கூறுவது எப்படி என்று கேட்டார். அப்படிக் கேட்கும் போதே ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாதும் கூறினார். (நேரடியாக ஸலவாத்து கூறும் போது அலைக (உங்கள் மீது) என்றும் படர்க்கையாகக் கூறும் போது அலைஹி (அவர் மீது)என்று கூற வேண்டும்.)
♨ ஸல்லல்லாஹு அலைக்க என்று அவர் ஸலவாத் கூறியதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுக்கவில்லை. திருத்தவில்லை. தொழுகையில் எப்படி ஸலாவாத் ஓதுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.
♨ எனவே தொழுகை அல்லாத நேரங்களில் ஸலவாத் கூறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.
மூலம் : ஆபீ
🍀 🌹 🍀 🌹 🍀 🌹 🍀 🌹
No comments:
Post a Comment