Saturday, January 27, 2018

ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்த 5 ரகசிய வார்த்தைகள் (தஸ்பீஹ்)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... 
ஒரு நாள் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள்...
அருமை மனைவியே ஹூனைன் போரில் நிறைய கனீமத் பொருள் வந்து இருக்கிறது.

நமக்கும் சிரமமான நேரம் உங்கள் தந்தையிடம் போய் கொஞ்சம் பொருள் வாங்கி வாருங்கள் என்று சொல்கிறார்கள்..!
உடனை அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தந்தையிடம் வந்து, யா ரஸூலுல்லாஹ் எங்களுக்கு சிரமமான நேரம்,,,
கடுமையான கஷ்டத்தில் இருக்கிறோம்,,,
எங்களுக்கும் பொருள் கொடுங்கள் என்று கேட்டார்கள்...!

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தன் அருமை மகளை கட்டியணைத்து அழுதார்கள்.
தாயிப் நகரத்தில் கல்லால் தாக்கிய போது இப்படி அழவில்லை.
உஹது போரில் பல் ஸஹீதானபோது இப்படி அழவில்லை.

அன்பு மகளே, ஃபாத்திமா என்னம்மா நேர்ந்தது. ஏன் உங்களுக்கு இந்த பொருள் வேண்டாம் மா...,,,
ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்த 5 ரகசிய வார்த்தைகள் தஸ்பீஹ் இருக்கிறது.
அதை சொல்லி துஆ கேட்டால் அல்லாஹூத ஆலா கேட்டதை எல்லாம் களம் இறங்கி உதவி செய்வான். நமது துஆக்களை கபூல் செய்து நமது கஷ்டங்களை நீக்குவான்.
உங்களுக்கு அது வேண்டுமா
அல்லது இந்த உலகத்து பொருள் வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

உடனை அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் அருமை தந்தையே எனக்கு இந்த பொருட்கள் வேண்டாம்.
அல்லாஹ்விடம் ஓதி துஆ செய்யும் ரகசிய வார்த்தைகள் அந்த 5 தஸ்பீஹ்களை சொல்லி தாருங்கள் அதுவே போதுமானது என்று கூறினார்கள்....!!
உடனை கண்மணி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி தருகிறார்கள்.
இந்த 5 தஸ்பீஹையும் வாழ்நாளில் எப்போதும் ஓதி அல்லாஹ்விடம் துஆ செய்தால் உங்கள் துஆக்களை அல்லாஹ் கபூல் செய்வான் என்று கூறினார்கள்....!!
யா அவ்வலுல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வத்தில் மதீன்
யா ராஹிமல் மஸாக்கீன்
யா அர்ஹமர் ராஹிமீன்
அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் அவர்கள் வாழும் காலம் வரை இந்த தஸ்பீஹ்களை தொடர்ந்து ஓதி வந்தார்கள்...
அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் பொருட்டால் நாமும் ஓதி துஆ செய்வோம்.
நம் அனைவரின் ஹலாலான ஹாஜத்துகளை வல்ல ரஹ்மான் நிறைவேற்றி தருவானாக. ஆமீன்.
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
(நூல்; ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா வாழ்க்கை வரலாறு, பாகம்; 32)
மூலம் : ஸித்றத்துல் முன்தஹா

No comments:

Post a Comment