அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
#யா_அல்லாஹ்!
நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!
தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!
மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!
எமது இரட்சகனே!
மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறேன்!
துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக!
நாங்கள் துக்கத்தில் ஆழ்ந்தால் எங்களை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக!
எங்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் எங்களை தள்ளி விடாதே!
நிச்சயமாக எங்களால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்!
எங்களை படைத்தவனே!
எமது வாழ்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே!
எங்களுடைய நற்பாக்கியமும், துர்பாக்கியமும் உன் கையிலே இருக்கின்றன!
ஏக இறைவா!
எங்களுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக!
இவ்வுலகமே ஒன்று சேர்ந்து நன்மை செய்ய நாடினாலும் எங்களுக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் கிடைக்காது என்று நாங்கள் ஈமான் கொண்டுள்ளேன்
உலகமெல்லாம் ஓன்று சேர்ந்து
எங்களுக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எங்களுக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே அடையும் என்பதை நாங்கள் நம்புகிறோம்!
ஏக இறைவா!
எங்கள் உள்ளத்தில் நிறைய தேவைகள் இருக்கின்றன!
உன்னையல்லால் வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது. ரகசியங்களும் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீ மட்டுமே அறிவாய்!
“குன்” ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே!
எங்களுடைய விருப்பங்களை நோக்கி (குன்) “ஆகிவிடு” என்று சொல்வாயாக!
நீ எங்களுடன் இருப்பதால்
யாரிடமும் எந்த தேவையும் இல்லை.
எங்களுக்கு நீ வழி காட்டு. எங்களுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்றுவாயாக.
நாங்கள் தவறான வழியில் செல்லும் போது எங்களை நேரான வழியில் திருப்பிவிடு.
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவர்ளாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் . . . . .
எங்கள் பாவங்களை மன்னித்து விடு
யா அல்லாஹ் . . . .
நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து விடு
யா அல்லாஹ் . . .
கப்ருடைய வேதனையிலிருந்தும், நரக நெருப்பிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக
யா அல்லாஹ்
இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவாயாக
ஆமீன் ஆமீன் யாரபீல்லாலமீன் !!!
No comments:
Post a Comment