Saturday, March 10, 2018

உள்ளமையின் உள்ளமைவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
பதினாறு வயதை தொட்ட இளைஞர் அப்துல் காதிர் தமது மூதாதையர் மற்றும் தமது வம்சாவளி பற்றி சிந்தித்தவாறு தமது தந்தையின் பருத்தி வயல்களில் நடந்தார்கள்.
தந்தை மற்றும் தாயின் வழி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதிரு ஜீலானி (கத்தஸல்லாஹுல் சிராஹுல் அஜீஸ்) அவர்களை சென்று அடைவது பற்றி வியந்து படி
"ஸகானில் ஹிப்பு" எனும் அன்னவர்களின் பேரின்ப பாடலை பாடியவாறு நடந்தார்கள்.

எதிரே தெரிந்த குன்றின் மீது பொன்னிறத்தில் ஒரு ராஜாளி தோன்றி அவர்களை வட்டமடித்தது.சிறிது நேரத்தில் இறுக தழுவுவது போன்ற உணர்வு மேலிட மயங்கி விழுந்தார்கள்.
நினைவு திரும்பும் போது வீட்டில் ஒரு பாயில் படுத்திருந்தார்கள்.
தாய், தந்தையிடமும் நடந்ததை சொன்னார்கள்.
கௌது நாயகம் அவர்களின் பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது.
"இறைவன் மீது ஆணை நிச்சயமாக எனது ஆன்மாவும், உள்ளமையும் எனது மூதாதையாகிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் 
ஆன்ம உள்ளமையே அல்லாது எனது உள்ளமையல்ல"

திரும்பவும் யாரோ இறுக தழுவவுது போன்று புத்துணர்வு ஏற்பட கண்டார்கள்.
தன் நெஞ்சை தானே குனிந்து பார்க்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.
"நிச்சயமாக எனது உள்ளமையாகிறது, எனது பாட்டனாராகி முஹையதீன் ஆண்டகை 
அவர்களின் ஆன்ம உள்ளமையல்லாது எனது உள்ளமையல்ல" என்று கூறினார்கள்.

நன்றி : அஹமது பிலால் - வலிமார்களை நேசிப்போம், 

No comments:

Post a Comment