அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!
*பாத்திமா (ரலி) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்*
நான் படித்த புத்தகம் ஒன்றில் மிகவும் அழகான ஹதீஸ் ஒன்றை பார்த்தேன் ...
பெரிய ஹதீஸாக இருக்குனு படிக்காம இருக்காதீங்க சகோஸ் ... அருமையான ஹதீஸ்
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...
கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் ...
சரி ஹதீஸுக்கு போலாம்...
ஒரு சமயம் அருமை பெருமானார் (ஸல் ) அவர்கள் தமது தோழர்களான அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) , உஸ்மான் (ரலி) அனைவர்களையும் அழைத்துக் கொண்டு தனது அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு சென்றார்கள்..
காரணம் அலி (ரலி) அவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார்கள்.
நோய் விசாரிக்க நபி (ஸல் ) அவர்கள் தலைமையில் ஒரு சிறிய கூட்டம் வருவதை படுக்கையில் இருந்து ஹஜ்ரத் அலி (ரலி) புரிந்து கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக எழுந்து வரவேற்று உள்ளே அழைத்து அமர வைத்தார்கள் .....
உள்ளே இருந்த அன்பு மனைவி பாத்திமா (ரலி ) அவர்களிடம் விஷயத்தை சொன்ன பொது அவர்கள் உள்ளம் துள்ளிக் குதித்தது . . அலி (ரலி) அவர்களின் உடல்நலம் பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள்.
விருந்தினர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே, ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள், அருமை மனைவி பாத்திமா (ரலி ) அவர்களிடம் ஏதாவது உணவு இருக்கிறதா? என்று விசாரித்தார்கள் ..
இப்போது நம் வீட்டில் தேன் தான் இருக்கிறது.
அதை கொடுங்கள் என்று
.
(நன்கு கவனிங்கள் சகோ இதை )
.
"அழகான பிரகாசமான கிண்ணத்தில் தேனை ஊற்றி கொடுத்தார்கள்" பாத்திமா (ரலி ) அவர்கள். அதை வாங்கி விருந்தினர்களின் முன் வைத்தார்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள்...
மகள் வீட்டின் தேனை பருகும் பொது அதில் "ஒரு முடி" இருப்பதை கண்டு கொண்டார்கள் கண்மணி நபி(ஸல்) அவர்கள்.
சிறிது நேரம் கிண்ணத்தை உற்று பார்த்து யோசித்து பார்த்து,
'அருமைத் தோழர்களே..!
இதோ பிரகாசமான கிண்ணம்...
இனிமையான தேன்...
அதில் ஒரு முடி...
இதை வைத்து உங்கள் பொன்னான கருத்துகளை சொல்லுங்களேன்' என்று அன்புடன் வேண்டிக் கொண்டார்கள்...
முதலாவதாக தேன் கிண்ணத்தைக் கையிலெடுத்த
அபூபக்கர் (ரலி) அவர்கள்,
''ஈமான் இந்த தேன் கிண்ணத்தை விட பிரகாசமானது...
ஈமானோடு வாழ்வது தேனை விட இனிமையானது...
ஈமானோடு இறப்பது இந்த முடியை விட சிக்கலானது..." என்றார்கள்...
அடுத்து உமர்(ரலி) அவர்கள் தனது கருத்தை முன் வைத்தார்கள். எப்படி?
"ஆட்சி அதிகாரம் இக்கிண்ணத்தை விட பிரகாசமானது...
ஆட்சி புரிவது தேனைவிட இனிமையானது...
ஆட்சியில் நீதனமாக நடந்து கொள்வது முடியை விட சிக்கலானது..."
என்றார்கள்...
உஸ்மான் (ரலி) அவர்கள் தேன் கிண்ணத்தை கையிலெடுத்து,
"கல்வி இக்கிண்ணத்தை விட பிரகாசமானது...
மார்க்கக் கல்வியைக் கற்று கொள்வது இந்த தேனை விட இன்பமானது...
கல்வி கற்றதின் படி அமல்களை செய்வது முடியை விட கடினமானது..."
என்றார்கள்...
அடுத்து அலி (ரலி) அவர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தார்கள்..
""விருந்தாளிகள் இந்த தேன் கிண்ணத்தை விட
பிரகாசமானவர்கள் ...
விருந்தாளியை உபசரிப்பது இந்த தேனை விட இனிமையானது...
விருந்தாளியை திருப்திப்படுத்துவது இந்த முடியை விட சிக்கலானது..."
என்றார்கள்...
அடுத்து தனது அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களின் கருத்துகளை கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்...
அதற்கு பாத்திமா (ரலி) அவர்கள்,
"யாரசூலல்லாஹ்...!
பெண்களின் வெட்கம் என்பது இந்த தேன் கிண்ணத்தை விட பிரகாசமானது...
பெண்கள் பிறரிடம் இருந்து உடலை மறைத்து வாழ்வது இந்த தேனை விட இனிமையானது...
பெண்கள் தங்களைத் தாமே இவ்வுலகிளின் தீயப் பார்வையை, தீய நடத்தைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது இந்த முடியை விட சிக்கலானது..."
என்றார்கள்..
அனைவரின் கருத்தை கேட்ட பின்பு நபி(ஸல்) அவர்கள் தங்களின் பொன்னான கருத்தை தங்கள் முபாரக்கான வாய் திறந்து சொன்னார்கள்...
"உருவமில்லாத அல்லாஹ் இக்கிண்ணத்தை விட பிரகாசமானவன்...
அந்த அல்லாஹ்விடம் ஒன்றி விடுவது இத்தேனை விட இனிமையானது...
அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் வாழ்வது இந்த முடியை விட சிக்கலானது..."
என்றார்கள்...
சுபுஹானல்லாஹ்...
உடனே ஹஜ்ரத் ஜிப்ரீயில் (அலை) அங்கு வந்து,
"யாரசூலல்லாஹ்...!
எனது கருத்தையும் சொல்லி விடுகிறேன்"
என்றார்கள்...
அனுமதி வாங்கிய பின்பு சொன்னார்கள்,
"அல்லாஹ்வின் பாதை இக்கிண்ணத்தை விட பிரகாசமானது...
அல்லாஹ்வின் பாதையில் செல்வது இந்த தேனை விட இனிமையானது...
அல்லாஹ்வின் பாதையில் கடைசி வரை இஸ்திகாமத்தாக இருப்பது முடியை விட சிக்கலானது" என்றார்கள்... மாஷா அல்லாஹ்
இந்த புனிதமான உரையாடல்களை கேட்டு கொண்டிருந்த அல்லாஹ் தனது கருத்தையும் சொல்லி அனுப்பினான்... "யா முஹம்மத் அவர்களே..!6
சுவர்க்கம் இந்த கிண்ணத்தை விடப் பிரகாசமானது...
சுவனத்தில் படைக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் இந்த தேனை விட இனிமையானது...
சுவனத்தின்6 பாலத்தை(சிராத் பாலம்) கடப்பது இந்த முடியை விட சிக்கலானது"
என்று கூறினான்...
அல்லாஹு அக்பர்...6
படிப்பினை:-
""""""""""""""""
நோய் விசாரிக்க போன இடத்தில் ஒரு அற்புதமான அறிவு சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள்...
அல்லாஹ்வும், ஜிப்ரீலும் தங்களின் கருத்தை சொல்லும் அளவுக்கு இந்த கலந்துரையாடல் நடந்தது இருக்கிறது...
பாத்திமா(ரலி) அவர்கள் பென்குலத்திற்கே மாபெரும் படிப்பினையை சொல்லி பெண் குலத்திற்கே பெருமை சேர்த்தார்கள்..
மாஷா அல்லாஹ்...
பாத்திமா(ரலி) அவர்கள் சொன்னது போல் இன்றைய பெண்கள் நடந்து கொண்டால் ஈருலகிலும் மாபெரும் வெற்றியை அடையலாம்.....
நன்றி : Imthi ljamaDahwa port News. ...
No comments:
Post a Comment