அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்..தொழுகை நேரம் நெருங்கி விட்டது ..மன்னர் அவர்களும் வந்து விட்டார்..இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம் முறையிடுகின்றார்..மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப் புரியவில்லை ..நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில் சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன்..நீங்கள் உதவி செய்து நல்வழிக் காட்டுங்கள் ..என வேண்டுகிறார்..
கூர்ந்துக் கேட்ட மன்னர் அவர்கள் தொழுகைக்கு நேரமாச்சி,,தொழுகை முடிந்த பின் இதே இடத்தில் மீண்டும் என்னை சந்திக்கவும் என சொல்லி அவசரமாக மன்னர் ஒளரங்கசீப் அவர்கள் தொழுகைக்கு சென்று விடுகிறார்......
தொழுகை முடிந்ததும் மன்னர் அதே இடத்திற்கு வந்து உதவிக் கேட்ட அந்த ஆளை தேடுகிறார்..அவரை காணவில்லை ..உடனே தனது பணியாளர்களை அழைத்து அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும்படி ஆணையிட அவர்கள் ஓடிச்சென்று வேறு இடத்தில் நின்றுக் கொண்டிருந்த அந்த நபரை அழைத்து வந்து மன்னரிடம் விடுகின்றனர் ..மன்னர் அவரை பார்த்து எங்கே சென்றீர் உமக்கு என்ன உதவி வேண்டும் என கேட்க,,,அந்த நபர் இப்போ உங்க உதவி எனக்கு வேண்டாம் மன்னா என்று அவர் சொல்ல,,மன்னர் திடுக்கிட்டு தொழ போகும்போது உதவி கேட்டீர்,,தொழுது விட்டு வந்து நானே உம்மை அழைத்து உதவ முன் வரும்போது வேண்டாம் எனகிறீரே என்ன காரணம் ???
மன்னா தொழுகை முடிந்ததும் உங்களை பள்ளிக்குள் பார்த்தேன்..எல்லா செல்வங்களும் அதிகாரங்களும் பெற்று இந்த மண்ணை ஆளுகின்ற மன்னராகிய நீங்கள் இறைவனிடத்தில் கையேந்தி கெஞ்சி கெஞ்சி அழுது கண்ணீர் சிந்தி மன்றாடி உதவி வேண்டி கண்மூடி அமர்ந்து இருந்தபோது அதைக்கண்ட எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது ..இப்பேற்பட்ட மன்னர் இறைவனிடமே யாசகம் கேட்கும்போது நாம் ஏன் மனிதர்களிடம் கெஞ்ச வேண்டும் ,,நாமும் இறைவனிடம் கேட்போமே என்று என்னை நானே மாற்றிக்கொண்டேன் மன்னா என்றதும் ..மன்னரின் கண்கள் கலங்கின..மனதும் கலங்கியது..உடனே அவரை மரியாதை கலந்த பார்வை பார்த்து விட்டு நண்பரே உமது எண்ணம் உண்மையாகட்டும்,மேலும் உறுதியாகட்டும்.. மனிதர்கள் புரியும் உதவிக்கு அளவு உண்டு..அல்லாஹ் புரியும் உதவிக்கும் அருளுக்கும் அளவே கிடையாது ..யாராக இருந்தாலும் அல்லாவிடம்தான் உதவி தேடியாக வேண்டும் ,,கடைசி வரை இதையே கடைபிடியும் என்று கூறி அப்போது தன் கைவசம் இருந்தவற்றை அவரின் கையைப் பிடித்து வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டு மன்னர் இறை சிந்தனையோடு நகர்கிறார்..அந்த நபரோ இறைவனிடம் கையேந்த மீண்டும் பள்ளிக்குள் செல்கிறார்!!
நீதியின் புதல்வன் (17-6-2016)
நன்றி : சாகுல் ஹமீது
No comments:
Post a Comment