அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!!
அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளியுள்ளார்கள். 'கியாமத் நாளில் முதலில் தீர்ப்பு அளிக்கப்படுபவர் ஒரு ஷஹீத் (மார்க்கப் போரில் இறந்தவர்) ஆவார். அல்லாஹ் அவரை அழைத்து உலகில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியங்களைச் சொல்லிக் காட்டுவான்.அவைகளை அவர் ஒப்புக் கொள்வார். அவைகளைக் கொண்டு என்ன அமல் செய்தாய்?' என்று கேட்கப்படும்.
அப்பொழுது அவர் உனது திருப்தியைப் பெறுவதற்காக உன் பாதையில் போராடி அஹீதாகி விட்டேன் என்ற கூறுவார். இல்லை நீ பொய் சொல்கிறாய்! வீரன் என்ற மக்கள் உன்னைப் புகழ வேண்டும் என்பதற்காகப் போராடினாய். அந்தப் புகழை உலகிலேயே அடைந்து விட்டாய் (உனது நோக்கம் உலகிலேயே நிறைவேறிவிட்டது) என்று அல்லாஹ் கூறுவான். இனி உன்னை முகங்குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசப்படும்' என்று அவருக்குத் தீர்ப்பளிக்கப்படும்.
இரண்டாவதாக ஓர் ஆலிம் வருவார். அவர் இல்மைக் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்து, குர்ஆனையும் ஓதி உணர்ந்தவராவார். அவருக்கு உலகில் அளிக்கப்பட்ட பாக்கியங்கள் நினைவூட்டப்படும். அவைகளை அவர் ஒப்புக்கொள்வார். அந்தப் பாக்கியங்களைக் கொண்டு என்ன அமல் செய்தாய்?' என்று கேட்கப்படும். 'யா அல்லாஹ்! உன் திருப்திக்காக வேண்டியே இல்மைக் கற்றேன்; பிறருக்கு அதைக் கற்றுக் கொடுத்தேன்; குர்ஆனையும் ஓதினேன் என்று அந்த ஆலிம் பதில் கூறுவார். இல்லை! நீ பொய் சொல்கிறாய்! மக்கள் உன்னை ஆலிம், கார் என்று புகழ்வதற்காக நீ இவைகளைச் செய்தார். அவ்வாறே உலகிலேயே உனக்குப் பெயர் கிடைத்து விட்டது, என்று அல்லாஹ் கூறி இனி உன்னை முகங்குப்புற இழுத்து சென்று நரகில் வீசப்படும்' என்று தீர்ப்பளிப்பான்.
மூன்றாவதாக ஒரு பணக்காரர் வருவார். உலகில் அவருக்கு நிறையச் சொத்துகளும், செல்வமும் அளிக்கப்பட்டன.அவரிடத்தில் இந்தப் பாக்கியங்களை அல்லாஹ் நினைவூட்டுவான். அவர் அவை அனைத்தையும் ஏற்றுக் கொள்வார், அவைகளை வைத்து நீ என்ன அமல் செய்தாய்? என்று விசாரிக்கப்படும். 'யாஅல்லாஹ்! உனது திருப்தியைப்பெறுவதற்காக நீ விரும்பிய எல்லா வழிகளிலும் எனது செல்வத்தைச் செலவு செய்தேன், என்று கூறுவார். இல்லை!!நீபொய்சொல்கிறாய்! கொடைவள்ளல் என்று புகழ் அடைவதற்காகச் செய்தாய். அவ்வாறே உலகில் உனக்குப்புகழ் கிடைத்து விட்டது என்று அல்லாஹ் கூறிய பின்,அவரையும் முகங்குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு தீர்ப்பளிப்பான்.
நூல்: மிஷ்காத்
நன்றி நபிவழி நடந்தால் நரகமில்லை
No comments:
Post a Comment