Sunday, June 3, 2018

பத்ர் யுத்தம்

பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றிலே மிகப் பிரபலமானதும், பெரிய யுத்தமும் ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது ஸஹாபாக்களிடம் நபிகள் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள். சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனையோ உயிர்த் தியாகம் எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க யாரஸூலல்லாஹ்! சிறிய யுத்தம் என்று சொல்கின்றீர்கள் எனக் கேட்க,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “வாளேந்திப் போராடுவது பெரிய யுத்தமல்ல; தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸில் போர்களத்தில் வாள் ஏந்திக் காபீர்களுடன் யுத்தம் செய்வது சிறிய யுத்தம் என்றும், ஒருவர் தனது நப்சுடன் போரிடுவது பெரிய யுத்தம் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிறிய யுத்தத்தில் உயிர் துறந்தவர் ஷஹீத் ஆகிவிடுகிறார் என்றால் பெரிய யுத்தம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வருணிக்கப்பட்ட நப்சுடனான போரில் உயிர் துறந்த ஒருவர் ஷஹீதாகி விடுவார் என்பதில் வியப்பொன்றும் இல்லை. ‘நுபுவ்வத்’ நபித்துவம் என்ற பதவி நபிமாருக்கும், ‘விலாயத்’ ஒலித்தனம் என்ற பதவி அவ்லியாக்கள் எனப்படும் இறை நேசர்களுக்கும் கிடைப்பதனால் அப்பதவியைப் பெறுபவர் நப்ஸுடன் போராடி வெற்றி பெற்றவராக இருத்தல் வேண்டும். உயர் பதவிக்குத் தகுதியற்றவருக்கு அப்பதவியை வழங்குவது நியாயமற்றது. உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் வலிமார்களும் ஜிஹாத் அக்பர் என்னும் பெரிய யுத்தம் செய்தவர்களேதான். அவ்யுத்தத்தில் போராடி வெற்றி பெறாதவர் நபியாகவோ, வலியாகவோ இருக்க முடியாது.
எனவே, மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நப்சுடன் போராடிய அனைவரும் பெரிய யுத்தம் செய்த ஷஹீதுகளேயாவார்கள். சிறியபோரில் உயிர் துறந்தவர் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் நப்ஸுடன் போராடிப் பெரிய யுத்தம் செய்தவர் உயிருடன் இருப்பது நிச்சயமானதாகும். வாளேந்திக் காபீர்களுடன் சமர் செய்வது சிறிய ஜிஹாத் யுத்தம் என்றும், நப்சுடன் போராடுவது பெயரிய யுத்தம் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதன் இரகசியம் என்னவெனில் ‘லா இலாஹ இல்லல்லாஹு’ என்னும் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாத காபிரீன்களுடன் வாளேந்திப் போரிடுவது மிகச் சுலபம். ஏனெனில் காபீர் தன்னை விட்டும் வேறானவனேயல்லாமல் தன்னிலிருப்பவன் அல்லன். நப்ஸு என்பது தன்னிலேயே அமைந்த ஒன்றாகும். மேலும் காபிர் சடமுள்ளவனாகும்; நப்ஸ் என்பது சடமுள்ளதல்ல. ஆதலால் தன்னை விட்டும் வேறான ஒருவனையும், சடமுள்ளவனையும் வெட்டிக் கொன்றுவிடுதல் தன்னிலுள்ளதையும், சடமில்லாததையும் வெட்டிக் கொல்வதைவிடச் சுலபமானதேயாகும்.
ஆகவே, காபிர்களுடன் வாளேந்திப் போரிடுதல் என்ற சிறிய போரில் மரணித்து ஷஹீதானவர்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று கூறும்போது, நப்ஸ் என்னும் ஆத்மாவுடன் போராடுதல் என்ற பெரிய போரில் ஷஹீதானவர்களான இறை நேசச் செம்மல்கள் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
— with Shahul Hameed Qadiri and 3 others.

No comments:

Post a Comment