Friday, July 27, 2018

சிரமமான நேரங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி வந்த துஆக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
*********
لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ 

லாயிலாஹா இல்லல்லாஹூல் அழீமுல் ஹலீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் 


அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.   ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ 

அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த ஐனின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த.

யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.   ஆதாரம் : அபூதாவூத்,அஹ்மத்

நன்றி : Islamic Duakkalum Hadeesgalum

No comments:

Post a Comment