Saturday, July 28, 2018

இஹ்ராம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
                                                                               *********
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள்
'சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம்
குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!' என்றார்கள்.
ஷஹீஹுல் புஹாரி 1542
ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) (இஹ்ராம் அணிந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீமிடம் நான் கூறியபோது, 'அவர் என்ன சொல்வது? (இது நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமா இருக்கிறதே) என்றார்.
(மேலும் தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது அவர்களின் தலையின் வகிட்டில் பார்த்த நறுமண எண்ணெய்யின் மினுமினுப்பு நான் இன்று பார்ப்பது போலுள்ளது என்று ஆயிஷா(ரலி) கூறியிருக்கிறாரே' என இப்ராஹீம்
கூறினார்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.
ஷஹீஹுல் புஹாரி 1538,1539
நன்றி : அதிரை முஸ்லீம் 

No comments:

Post a Comment