அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் 'இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு' வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் பெயர்கள் முறையே அனடோலி இவானிஷின் (Anatoly Ivanishin), Andrey Borisenko, Alexander Samokutyaev, Anton Shkaplerov, Boris Meshcherykov (உச்சரிப்புக்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கும் )
அனடோலி இவானிஷின்(Anatoly Ivanishin) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களோடு பேசும் போது 'நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு. அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்ச்சித்தோம். லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால் துல்லியமாக எடுக்க முடியவில்லை.
சில மணிகளுக்கு பிறகு வளைகுடாவின் பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். ஆச்சரியமாக அப்போது இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது. அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம்.
அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்" என்றார்.
PSSO என்ற அமைப்பானது சவுதி அரசால் லாப நோக்கமற்று நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் மக்களுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தையும், விண்வெளியின் பல புதிர்களை விடுவித்து மக்களுக்கு அதன் அறிவை சேர்ப்பிக்கும் ஒரு அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இளவரசர் சுல்தான் பின் சல்மான் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மதினா நகரத்து மேயர் பேசும் போது 'நீங்கள் ரஷ்ய தேசத்தவராக இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு விண்வெளி வீரர்களான நீங்கள் பொதுவானவர்கள். அது போல் நானும் சவுதிக்கு மட்டும் சொந்தமானவல்ல. உலக மக்களுக்கு பொதுவானவன். நாம் அனைவரும் இந்த உலக மக்களுக்கு சேவையாற்ற படைக்கப்பட்டுள்ளோம். 700 மில்லியன் உலக மக்களில் உங்களைப் போன்ற ஒரு சில விண்வெளி வீரர்களுக்கே விண்வெளிப் பயணம் சாத்தியமானது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இளவரசர் சுல்தான் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட மிகவும் உதவிகரமாக இருக்கிறார். இந்த அமைப்பு ஆரம்பித்த போதும் இந்த வீரர்கள் சவுதி வந்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளனர். இவர்களின் தொடர்பானது சவுதி இளைஞர்களின் விண்வெளி ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள் எனக்கு விளக்கிய போது மெய் சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால் மட்டுமே பார்க்கிறீர்கள். நான் அதோடு எனது இதயத்திலும் அந்த நிகழ்வை உள் வாங்கிக் கொண்டேன். மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள் அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட அதிக ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. ஆனால் குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும் புனித நகரங்களாக அறிவிக்கிறான். அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த வீரர்களுக்கும், உலகின் பல கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல இறைவன் ஏற்றுவானாக!' என்ற பிரார்த்தனையோடு முடித்தார்.
அல்லாஹு அக்பர்
நன்றி : Slaves Of Allah
No comments:
Post a Comment