Sunday, October 7, 2018

நாவலர் யூசுப் சாகிப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு தேர்தல் சமயம் ராமநாதபுரம் தொகுதியை நாவலர் யூசுப் சாகிப் அவர்களுக்கு ஒதுக்க சொல்லி சிராஜுல்மில்லத் அவர்கள் கலைஞரிடம் கேட்க, 
அதற்கு கலைஞர் இது நாவலர் யூசுப் சாகிப்  உங்களிடம் கேட்க சொன்னாரா? என்று கேட்டுள்ளார்!!
அதற்கு சிராஜுல்மில்லத் இல்லை. முதலில் உங்கள் ஒப்புதலை பெற்ற பின்பு, அவரிடம் சொல்லலாம் என்று எண்ணியுள்ளேன் என்று கூற,
Image may contain: one or more people
கலைஞர் சிரித்துக் கொண்டே, முதலில் நாவலரிடம் ஒப்புதல் பெற்று வாருங்கள் பார்ப்போம் என்று கூறி விட்டு, நானும் சிறுவயது முதல் நாவலரோடு பழகிய பால்யன் நண்பன் தானே என்று கூறியுள்ளார் கலைஞர்.
சிராஜுல்மில்லத் நாவலரிடம் உங்களுக்கு ராமநாதபுரம் தொகுதியை தர உங்கள் ஒப்புதல் வேண்டும் என்று கூற,
அதற்கு நாவலர் அவர்கள்...
என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டு விட்டு,
"என் இரண்டு கைகளும் எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் மட்டுமே என் தேவைக்கு கையேந்துமே தவிர, இந்த அற்ப உலக வாழ்க்கைக்காக ஓட்டுக் கேட்டு யாரிடமும் கைகூப்பி கேட்டு விடாது"
என் உயிர் இருக்கும் வரை முஸ்லிம் லீகின் அடிமட்ட தொண்டனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். கடைசிவரை அப்படியே வாழ்ந்தும் மறைந்தார்.

பதிவு: Mubarack Rasvi

No comments:

Post a Comment