அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 73:17)
'ஏக இறைவனை நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?'
'அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்'
-குர்ஆன் 73:17
சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தால் அந்த மக்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகினர் என்பதை தொலைக் காட்சிகளில் பார்தோம். அன்று ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியினால் பல ஆயிரக்கணக்கான கர்பிணிகளின் குழந்தைகள் குறையுடையதாக பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு மனிதனுக்கு ஏற்படும் அதிர்ச்சியானது அவனது உடலளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். சாதாரண பூகம்பத்திற்கே இந்த நிலை என்றால் வானம் வெடித்து சிதறும் போது,கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி சின்னா பின்னமாகும் போது மனிதனின் நிலையை சொல்லவும் வேண்டுமோ? அது போன்ற ஒரு சூழல் எற்படும் போது சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்கிறது இந்த வசனம். உலக முடிவு நாளுக்கும் தலைமுடி நரைப்பதற்கும் என்ன சம்பந்தம்?
1982ல் மலேசியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணியாற்றிய எரிக் மூடியின் (ERIC MOODY) ஆனுபவத்தை பார்போம். அவர் பயணிக்கும் போது விமானத்தின் நான்கு என்ஜின்களும் அடுத்தடுத்து பழுதடைந்து விட்டன. இனி இறப்புதான் என்ற முடிவுக்கு வந்தார். மிகப் பெரும் மன அழுத்தத்துக்கு அன்று ஆளானார். அதிர்ஷ்டவசமாக ஜகார்த்தாவில் அந்த விமானத்தை இறக்கி அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களிலேயே எரிக் மூடியின் தலைமுடியானது நரைக்கத் தொடங்கியது. விமானத்தில் அன்று விபத்து ஏற்படும் போது மன அழுத்தம் கொண்டாரல்லவா? அதுதான் நரைக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். மன அழுத்தத்துக்கும் தலைமுடி நரைக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளதை இந்த சம்பவமும் மெய்ப்பிக்கிறது. இதனை பிபிசியும் வெளியிட்டுள்ளது.
வேதியலில் நோபல் பரிசு வென்ற ராபர்ட் லெப்ஃகோவிட்ஸ் (ROBERT LEFKOWITZ) தலைமையில் ஒரு குழு ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி, மன அழுத்தம் போன்றவைகளால் உடலின் டிஎன்ஏக்களில் மாற்றம் ஏற்பட்டு அந்த மனிதனின் தலைமுடி நரைக்கத் தொடங்குவதாக கண்டு பிடித்தனர். முடி நரைத்தலானது ஒரு சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட ஓரிரு நாட்களிலேயே ஏற்படத் தொடங்கி விடும் என்றும் ஆய்வைறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையானது 'நேசர்' அறிவியல் இதழில் ஆகஸ்ட் 21, 2011 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. மனிதன் முதிர்ச்சியடைந்தால் இயற்கையாக முடி நரைக்கத் தொடங்கி விடும். நாம் இங்கு இள நரையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வறிக்கையானது சமீபத்தில்தான் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் குர்ஆனோ மனிதனுக்கு உலக முடிவு நாளில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து மன அழுத்தத்தால் அதீத பயத்தால் சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்ற அருமையான அறிவியலை சொல்லிச் செல்கிறது. நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைதான் இது என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.
மனிதனுக்குள் ஏற்படும் மன அழுத்தமானது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல அழுத்தங்களைக் கொடுத்து அதனால் தலைமுடி இளமையிலேயே நிறம் மாறக் காரணமாகி விடுகிறது என்று பார்தோம். இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் வாழ்க்கையானது எல்லோருக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் பெருமபாலான மனிதர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். ஒரு சிலருக்கு இந்த அழுத்தம் அதிகமாகவே தற்கொலைகளையும் நாடுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுபட மனிதனுக்கு உள்ள ஒரே வழி இறை தியானம்தான்.
இஸ்லாமியர்களே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் அதிக சதவீதமாக இருப்பர். பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ முடியவர்களாகவும் இருப்பர். இஸ்லாமியர்களில் நாத்திகர்கள் மிகக் குறைந்த சதவீதத்திலேயே இருப்பர். ஒரு நாளைக்கு ஐந்து நேரம் சென்று தனது கவலைகளை எல்லாம் தன்னை படைத்த இறைவனிடம் முறையிட்டு விடுகின்றனர் முஸ்லிம்கள். இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது. எனவே தான் பத்திரிக்கைகளில் தற்கொலைகள் செய்து கொள்பவர்களில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வருவதில்லை. அதற்கு காரணம் அவர்களின் இறை பக்தியே என்றால் மிகையாகாது.
நன்றி : சர்தார் அலி
No comments:
Post a Comment