Thursday, February 7, 2019

பதக்மியன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#பதக்மியன்
காந்திஜியை கொலை செய்த நாதுராம் கோட்சேயை நாடறியும். ஆனால் மகாத்மா காந்தியை காப்பாற்றிய பதக் மியன் எனும் இந்த இஸ்லாமியரை நாடு அறியாதது நமது துரதிஷடமே.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் முதல் போராட்டம் சம்பரான் சத்தியாக்கிரகம். 1917-லில் அன்றைய ஒன்றுபட்ட சம்பரான் மாவட்டத்தில் இண்டிகோ பயிரிட்ட விவசாயிகளின் கலகம் நடந்தது. சாயம் தயாரிக்க பயன்படும் இண்டிகோ எனும் வர்த்தக பயிரை விவசாயம் செய்ய வெள்ளைக்காரர்கள், நமது விவசாயிகளை கட்டாயப்படுத்தினர். இதற்கு எதிராக கலகம் செய்தனர். காந்தியை வரவழைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Image may contain: 1 person                                                                            1917-ஏப்ரல் 15-அன்று காந்தி சம்பரான் மாவட்டத்தின் அன்றைய தலைநகரமான மோதிஹரிக்கு வருகிறார். காந்தியை இர்வின் என்ற பிரிட்டிஷ் தோட்ட கம்பெனி மேனேஜர் இரவு உணவு கொடுப்பதாக அழைக்கிறார். இரவு விருந்தில் விஷம் கலந்து காந்திக்கு கொடுத்து கொலை செய்ய திட்டமிடுகிறான் இர்வின். தனது சமையல்காரர் பதக் மியன் அழைத்து பாலில் விஷம் கலந்து கொடுக்க கட்டளை இடுகிறான். இல்லையேல் நீ கடுமையாக தண்டிக்கபடுவாய் என பயமுறுத்துகிறான். ஆனால் நமது பதக் எனும் தேசபக்த- இஸ்லாமிய சமையல்காரர் காந்திக்கு பாலை கொடுக்கும் போது அதில் விஷம் கலந்து உள்ள உண்மையை கூறிவிடுகிறார். காந்தி காப்பாற்றபடுகிறார்.
இதை நேரடியாக ராஜேந்திர பிரசாத் பார்க்கிறார். ஆனால் பதக் பணி நீக்கம் செய்யப்பட்டார். சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் ஆட்சி. சித்தரவதை செய்து.இவரது வீட்டை இடித்து சுடுகாடாக்கினர் ஆங்கிலேய அரசு.
பின்னர் நாடு விடுதலை அடைகிறது. ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதி ஆகிவிட்டார்.1950-ல் ராஜேந்திர பிரசாத் அதே மோதிஹரி ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார். நாடு விடுதலை பெற்று முதல் இந்திய ஜனாதிபதி வருகை.பெருங்கூட்டம். பலரும் முன்டியடித்து கொண்டு ஜனாதிபதியை பார்த்து முயலுகின்றனர்.
அங்கே ஓரமாக தேசபிதா "பக்கிரியை" காப்பாற்றிய அந்த இஸ்லாமிய பக்கிரி- பதக் கூட்டத்தில் இருப்பதை கவனித்த ஜனாதிபதி அவரை அழைக்கிறார். பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்து செல்கிறார். அங்கே பதக்கை கட்டி தழுவி காந்தியை இவர் காப்பாற்றிய கதையை ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் விவரித்து பேசுகிறார். கலெக்டரை அங்கேயே அழைத்து காந்தியை காப்பற்றிய பதக் மியனுக்கு 24-ஏக்கர் நிலத்தை அரசு தானமாக வழங்க உத்தரவிட்டார்.
ஆம். பதக் மியனின் தியாகமும் எமது விடுதலை போராட்ட பாரம்பரியம் என்பேன்.
மீள்பதிவு : பிரஜாபதி

No comments:

Post a Comment