Thursday, July 18, 2019

#நபிமார்கள் வரலாறு பாகம்......12 - #நபிமார்கள் வரலாறு பாகம்......12

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவரது குடும்பத்தினர்களும் அவ்வூரை விட்டும் அகல வேண்டும் என்றும் செல்லும்போது எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்க கூடாது என்றும் சொன்னார்கள்.
ஆனால்,,, அவர்கள் செல்லும்போது நபி அவர்களின் மனைவி என் இனத்தவரே! என் இனத்தவரே! என்று கூறி திரும்பிப் பார்த்ததினால் கல்லானாள்.

அல்லாஹ் மறுநாள் விடியலில் அந்த மக்கள் எழுந்தவுடன் அல்லாஹ் கூறுகிறான்....,,
அல்குர்ஆனில் நம்முடைய கட்டளையான காலை வந்தவுடன் அவர்களது ஊரில் ஒரு பெரிய இடிமுழக்கத்தை கொடுத்தோம்.
அவ்வாறே அவர்களது ஊரை மேல்புறத்தை கீழ்புறமாகவும் கீழ்புறத்தை மேல்புறமாகவும் தலைகீழாக மாற்றினோம்.
பிறகு செங்கற்களை மழைபோல் பொழிய செய்து அவர்களை அழித்தோம் என்கிறான்..!!
#ஹஸ்ரத்_லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் இறுதி காலம்..!!
#ஸதூம் நகர அழிவிற்கு பின்னர் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீண்டும் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்தனர்.
#வந்து_நடந்ததை கூறும் முன்னர் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஏற்கனவே அங்கு நடந்ததை அறிந்திருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள்.
#பின்னர் தம் மறைவு வரை அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்த வண்ணம் இருந்தார்கள்.
#ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களின் புனித அடக்கஸ்தலம் தற்போதைய பாலஸ்தீன் நாட்டில் பனி நாயிம் என்னும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. அதனுடன் சேர்ந்து ஒரு பள்ளிவாசலும் காணப்படுகிறது.
#ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) பற்றி வந்த அல்குர்ஆன் வசனங்கள்
29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.
27:56. அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
29:30. அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
29:31. நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
29:32. “நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
29:33. இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள்.
நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
29:34. நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
29:35. (அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்...!!!
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரலாறு முடிந்தது...!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
தகவல் : ஸித்றத்துல் முன்தஹா

No comments:

Post a Comment