Wednesday, July 17, 2019

பொறுமையின் சிகரம் ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியாரின் உண்மையான யர் #ஸைய்யிதா_ஜைனப்என்பதாகும். #சையத்_அலி_ஃபாத்திமா என்பது தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள அவர்களின் அடையாளப் பெயர் ஆகும். மதீன மாநகரில் பெண்கள் பேன வேண்டிய மார்க்க ஒழுக்கங்களில் ஈடு இணையற்று சிறந்து விளங்கிய அவர்களை, ஷஹீது நாயகம் அவர்கள் தங்களுடைய 25ஆவது வயதில் மணமுடித்தார்கள்.#சையத்_அபூதாஹிர், #சையத்_ஜைனுல்_ஆபிதீன் ஆகிய இரு புதல்வர்களை அல்லாஹ் அவர்களுக்கு அருளினான். இளைய மகனார் ஜைனுல் ஆபிதீன் நாயகம் அவர்கள் இளம்வயதில் வஃபாத்தாகி விட்டார்கள்.
பாதுஷா வின் அரசவையில் மகாராணியாக இருந்த போதும், துளியளவும் அதற்கான பகட்டு ஏதும் இல்லாமல் பொறுமையுடனும், இறையச்சத்துடன் வாழ்ந்து, புதல்வர்களுக்கும் இறையச்சத்தின் உச்சத்தை போதித்ததோடு அக்காலத்தில் மதீனத்து பெண்களுக்கு மார்க்கம் போதிக்கும் ஆசிரியையாக திகழ்ந்தார்கள். தமது கணவர் பாதுஷா நாயகம் அவர்கள் மார்க்க பணிக்காக அரசவையை துறந்து இந்தியா நோக்கி புறப்பட்ட போது அனைத்து வகையிலும் துணையாக இருந்ததோடு, தமது மகனார் பட்டத்து இளவரசர் சையத் அபூதாஹிர் பாதுஷா அவர்களை இறைவழியில் போர் செய்வதன் பலன்களை எடுத்து கூறி#ஜிஹாத் உடைய ஆர்வமூட்டினார்கள். மிக உக்கிரமாக நடைபெற்ற தென் தமிழக போரில் பல்வேறு சேதங்களை கண்டும், #கர்பலா களத்தில் பொறுமை காத்த தமது பாட்டியார்#ஸைய்யிதா_உம்மு_குல்தும் ரலியல்லாஹு அன்ஹா (#இமாம்_ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இளைய சகோதரி) அவர்களின் பொறுமையின் வாரிசாக திகழ்ந்தார்கள். 6-ஆவது போரில் அவர்களின் சகோதரர்#ஸையது_ஜைனுல்_ஆபிதீன் நாயகம் அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட போதும் பொறுமை காத்தார்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக 9-ஆவது போரில் தங்க மகனார் அபூதாஹிர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிரிகளை வீழ்த்திக் கொண்டே முன்னேரி சென்ற போது பின்புறத்திலிருந்து சுற்றி வளைக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். 18 வயதே ஆன தங்க மகன் அபூதாஹிர் நாயகத்தின் திரு முகத்திலும், புனித உடலிலும் 72 காயங்கள் வாள், ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும், கர்பலா களத்தில் இதே போன்று உயிர் நீத்த தமது பாட்டனார்கள் #இமாம்_அலீ_அக்பர், #இமாம்_காஸிம் வழியை பின்பற்றி, சிரித்த முகத்துடனே, தந்தை கண் முன்னே அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தார்கள். #அபூதாஹிர்நாயகத்தின் நிலையை கண்ட பாதுஷா நாயகம் மிகவும் சேர்ந்து போய், தமது கண்களின் குளிர்ச்சி தங்க மகன் அபூதாஹிர் நாயகம் அவர்களின் புனித உடலை பெண்கள் பகுதிக்கு எடுத்து சென்றார்கள். மணக்கோலத்தில் காண வேண்டிய தம் 18வயது ஆன திருமணமல்லாத மகன் அபூதாஹிரை பிணக்கோலத்தில் கண்ட பெற்ற தாய் ஜைனப் அம்மா அவர்கள் உள்ளே இதயம் வெடித்து சிதறினாலும், நிதானம் இழந்து விடாமல் அந்நிலையிலும் அல்லாஹ்விற்காக தானே மகனை அர்ப்பணித்தோம் என பொறுமை காத்தார்கள். #மதுரைகுத்புஸ்ஸமான் அல் ஆரிஃபுபில்லாஹ் சையத் அப்துஸ் ஸலாம் இப்ராஹீம் #ஸாலிம்_ஹழ்ரத் அவர்கள் ஒரு கஸீதாவில் கூறுவது போல " நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் பெயர் தாங்கிய பாதுஷா இப்ராஹீம் ஷஹீத் நாயகம் அவர்கள், அவர்களைப் பின்பற்றி தங்கள் மகனை அல்லாஹ்விற்காக #குர்பானி கொடுத்து விட்டார்கள்." தாய் ஸையிதா #ஜைனப்_அம்மா அவர்கள் இது போன்ற ஒரு சூழ்நிலையிலும் காத்த பொறுமை உலகத்தில் எந்த தாய்களாலும் இயலாதது. இறைப்பற்றின் காரணத்தாலேயே இது சாத்தியமாயிற்று. இறுதி போரின் முடிவில் வெற்றி கண்ட பாதுஷா நாயகம் #பௌத்திரமாணிக்கபட்டணத்தின் மன்னராக முடி சூடிய போது, இவ்வரசாட்சியின் #மகாராணியாக ஜைனப் அம்மா பொறுப்பேற்றார்கள். இவ்வுலகில் மகாராணியாக திகழ்ந்த அவர்கள் மறை அரசாட்சியிலும் மகாராணியாக திகழ்கிறார்கள். இவர்களின் புனித ரவ்லா ஷரீஃப், #ஏர்வாடி யில் பெரிய தர்கா விற்கு மேற்கே அமைந்துள்ளது.#இந்த_மக்பரா_ஆண்கள்_தடை_செய்யப்பட்ட_பகுதியாகும்.#பெண்களுக்கு_மட்டுமே_அனுமதி_உண்டு. எல்லாம் வல்ல#அல்லாஹ், ஸையிததினா ஸைய்யிதா ஜைனப் அம்மா (சையத் அலி ஃபாத்திமா அம்மா) ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பொறுமையின் பொருட்டால், நம் #பெண்கள்அனைவருக்கும் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலான வாழ்க்கையையும், இறையச்சத்தையும் தந்தருள் புரிவானாக.
தகவல் : ஏர்வாடி தர்காஹ் 

No comments:

Post a Comment