Friday, August 9, 2019

#அரஃபா_தினம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
#அரஃபா தினம் அல்லாஹ்வின் அருள் அதிகமாகப் பொழியும் நாள்:
#நபிகளார்_ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
''#சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு''.
#ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா):
''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?''
#நபிகளார்: ''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!''
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்;
தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.
” 9இந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம்?
நோன்பு,,
துஆக்கள்,,,,
பாவமன்னிப்பு,,,,
புலன்களை அடக்கி,,,, பாவத்தைத் தவிர்ந்து கொள்ளுதல்,,,,
அரபா நாள் நோன்பு வைப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன்...!!   (முஸ்லிம்: அபூதாவூது)10
அன்று அதிமகமாக துஆவில் ஈடுபடவேண்டும்.
''அரஃபா நாளில் செய்யும் துஆ சிறந்த துஆவாகும்.''
அலி ரலியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கிறார்கள் .
நபிகள் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்:
நானும் எனக்கு முன்னுள்ள நபிமார்களும் அரஃபாவில் அதிகம் ஓதிய துஆ:
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ اجْعَلْ فِي سَمْعِي نُورًا ، وَفِي بَصَرِي نُورًا ، وَفِي قَلْبِي نُورًا ، اللَّهُمَّ اشْرَحْ لِي صَدْرِي ، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَأَعُوذُ بِكَ مِنْ وَسْوَاسِ الصُّدُورِ ،
ஐம்புலன்களைப் பாதுக்காக்கவேண்டும்.
‘’யார் அரஃபா நாளில் தன் செவி, பார்வை, நாவு இவற்றைப் பாதுகாக்கிறாரோ,,,
அவரை இந்த அரஃபாவிலிருந்து அடுத்த அரஃபா வரை அல்லாஹ் பாதுகாக்கிறான்....!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

No comments:

Post a Comment