பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#ஒரு_அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம்.
கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக்
கொண்டிருந்தார்கள்..
எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம்.
திடீரென்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள்.
ஒருவன் உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கும்
(சக்கராத்தின்) நேரத்தில்,,,,,
சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள்.,,
அவர்கள் சொர்க்கத்தின் கபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும் சொர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு,,,
அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார்..
அவரை நோக்கி,"நல்ல ஆத்மாவே இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய
அவனுடைய திருப்தியையும் நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறிவிடு" என கூறுவார்.
தோல்பையிலிருந்த அதனை வளைத்தால் நீர் வழிந்து விடுவது விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிலிலிருந்து இலகுவாக)வெளியேறிவிடும்.
அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்த கபனில் வைத்துக் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள்.. !!
(பின்பு அந்த உயிரை)அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்.வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்க்கு அருகாமையில் அந்த அந்த உயிரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் நறுமணம் கமழும் இது யாருடைய உயிர்? என்று வானவர்கள் கேட்பார்கள்..!
அதற்க்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரை கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்..!!
இவருக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கூறுவார் வானம் திறக்கப்படும். இவ்வாறு ஏழு வானமும் திறக்கப்படும்..!
அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்லியீனில் பதிவு செய்யுங்கள் ,,,,,
அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான்..!
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள்..,,,
அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும்..உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா என்று கூறுவார்..!
அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்துவிடும். நனைத்த
கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல அவனுடைய அவனுடைய உடலிலிலிலிருந்த உயிர் கைப்பற்றப்படும்.
கொஞ்ச நேரம் கூட அவ்வானவர் தன் கையில் வைக்கமாட்டார்.உடனே கம்பளி துணியில் துணியில் வைத்து விடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்க்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தைவிட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும்.பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்க்கு கொண்டு செல்வார்.
வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்க்கு அருகில் கொண்டு செல்கின்ற போது,, எவனுடைய கெட்ட உயிர்?என அங்குள்ள வானவர்கள் கேட்பார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறினார்கள்...!! (நூல் : அஹ்மத் 17803)
இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் நல் அமல்கள் செய்து ஸாலிஹானவர்களாக மரணிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக!
ஸல்லல்தார் லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
தகவல் : சர்தார் அலி
No comments:
Post a Comment