Monday, January 20, 2020

மனந்திறந்து விருந்தினர்களை ஆதரித்துக் களைத்து போவதால் நமக்குக் கிடைக்கும் பலன் இது தான்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் கணவர் ஏராளமான விருந்தினர்களை அழைத்து வருகிறார்.
நான் அவர்களுக்கு உணவு தயாரித்து தயாரித்து மாய்ந்து போய்விட்டேன்.”
நபி (ஸல்) அவர்கள் எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தார்கள். அவள் போய்விட்டாள்.
சில நாட்களுக்குப் பிறகு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண்ணின் கணவரை அழைத்துக் கூறினார்கள்:
''நான் இன்று உங்கள்
வீட்டுக்கு விருந்தினராக
வரப் போகிறேன்''
அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விட்டார்.
தன் இல்லத்தை நோக்கி ஓடோடிச் சென்றார்.அந்த மகிழ்ச்சியான செய்தியை தன் மனைவியிடம் கூறினார்.
அவளும் மகிழ்ச்சியால்
தன்னை மறந்தாள்.
அந்த கண்ணிய மாநபியின் வருகைக்காக, வீட்டில் ஒரு துளி மீதம் வைக்காமல் அருமையாய் சமையல் செய்து முடித்தாள்.
அந்த அற்புதமான விருந்துபசாரத்திற்கு பிறகு நபியவர்கள் அப் பெண்ணின் கணவரிடம் கூறினார்கள்:
''நான் எந்த வாயில் வழியாக வெளியேறிச் செல்கிறேனோ அந்த வாயிலை உம் மனைவியைக் கவனிக்க சொல்லுங்கள்''
அவருடைய மனைவி ஆவலுடன் நபி (ஸல்) அவர்கள் வெளியேறிச் செல்லும் வாசல்
வழியே நோக்கினாள்.
அதிர்ச்சியால் அப்படியே உறைந்தே போனாள் !
ஆம் !
அண்ணல் நபி (ஸல்)அவர்கள் சென்ற வழியாக அவர்களின் பின்னால் சகல வகையான தீமைகளும், சோதனகளும், வேதனைகளும் வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தன.
இதைக் கண்ட அவள் அப்படியே மயக்கமுற்று வீழ்ந்தாள்.
அவள் தெளிவுற்றதும் கண்மணி (ஸல்) அவர்கள் அவளிடம் கூறினார்கள்.
''ஒவ்வொரு முறை விருந்தினர்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போதும் இதுவே நடந்தது.
அத்தனை வகையான தீமைகளும், சோதனகளும், வேதனைகளும், உங்கள் வீட்டை விட்டும் வெளியேறிச் சென்று விட்டன.”
•••••••••••••••••••••••••••••••

மனந்திறந்து விருந்தினர்களை ஆதரித்துக் களைத்து போவதால் நமக்குக்
கிடைக்கும் பலன் இது தான்..

தகவல் : சாகுல் ஹமீது 

No comments:

Post a Comment