Monday, January 27, 2020

தஸ்பீஹை விரல்களால் எண்ணிக்கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மனிதனின் உறுப்புகள் கியாமத்நாளில் சாட்சி கூறுவது பற்றி ஹதீஸ்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு ஹதீஸில் .காஃபிர்கள் கியாம நாளில் தங்களுடைய தீய செயலை கண்டுகொண்டபிறகும் அவர்கள் பாவமே செய்யவில்லை என்பதாக மறுப்பார்கள். அப்பொழுது அவர்களிடம் உங்களுடைய அண்டைவீட்டார்கள் சாட்சிகூறுகிறார்கள் என்று சொல்லப்படும்.அவர்கள் பகைமையின் காரணமாக பொய் சொல்கிறார்கள் என்று சொல்வார்கள்." அப்படியானால் உங்கள் உறவினர்கள் அது பற்றி சாட்சி கூறுகிறார்கள் என்று சொல்லப்படும் அவர்கள் அதனையும் பொய்யென கூறுவார்கள். பிறகு அவர்களுடைய உறுப்புகளே அங்கு சாட்சிகளாக்கப்படும். முதன் முதலாக தொடையாகிறது என்னென்ன பாவங்கள் செய்தது என சாட்சிகூறும். (மிஸ்காத்)

மற்றொரு ஹதீஸில்..ஒரு குழந்தையை அதன் தந்தை அடிக்கும்பொழுது அது அங்கும் இங்கும் தடுமாறுவது போல் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தில் கடைசியாக செல்லும் மனிதன் தடுமாறி தவழ்ந்து செல்வான் அப்பொழுது மலக்குகள் அம்மனிதனிடம் நீ இப்பாலத்தை எளிதாக கடந்துசென்றுவிட்டால் நீ செய்த செயல்களை சொல்லிவிடுவாயா? என்று கேட்பார்கள். அவன் அனைத்தையும் சொல்லிவிடுவதாகவும் எதையும் மறைக்கமாட்டேன் என்றும் அல்லாஹ்வின் கண்ணியத்தின் மீது ஆணையிட்டு வாக்களிப்பான்.சரி நேராக நின்று நடந்து செல் என்று கூறப்படும்.அவன் கடந்து வந்ததும் இப்பொழுது நீ செய்த நன்மைதீமைகளை சொல்லுவாயாக என்று கூறப்டும் அம்மனிதன் உண்மையைச் சொன்னால் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்று எண்ணி பாவங்கள் ஏதும் செய்யவில்லை என்று மறுத்து விடுவான். அப்பொழுது அவன் உறுப்புகளுக்கு கட்டளையிடப்படும். அப்போது ஒவ்வொரு உறுப்புகளும் அதன் செயல்களை கூற ஆரம்பிக்கும்.அப்போது அவன் நிர்பந்தமாக தன் குற்றங்களை ஏற்றுக்கொள்வான்.சந்தேகமின்றி அழிந்து நாசமாகக்கூடிய இன்னும் பல பாவங்களும் இருக்கின்றன என்பதாகவும் கூறுவான். இதன் பிறகு மறுமையின் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். அல்லாஹ் அவன் நாடினால் அம்மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும் இல்லையேல் அம்மனிதனின் மறுமை...??
இதனால்தான் நபி (ஸல்)அவர்கள் விரல்களால் தஸ்பீஹை எண்ணிக்கொள்ளுங்கள். இதன் காரணமாகவே மஸ்ஜிதுக்கு அதிகமாக நடந்து சென்று நன்மைகளை அதிகமாக்கி கொள்ளுங்கள். என்றார்கள் ஏனெனில் காலடிகளின் அடையாளங்களும் சாட்சிகளாக கொண்டுவரப்படும். காலடிகளுக்கும் நன்மைகள் எழுதப்டுகின்றன.
பாவங்களே செய்யாமல், பாவங்களைப்பற்றி எவ்வித சாட்சியும் இல்லாதவர்கள் அல்லது பாவங்களுக்காக தவ்பாச்செய்து மன்னிக்கப்பட்டவர்கள். நன்மைகளையே செய்து நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான சாட்சிகளைத் தங்களுக்குச்சாதகமாக வைத்திருப்பவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்.!
தகவல் - அகிலா பர்வீன்.- தாருஸ் ஷிஃபா - இம்மை மறுமை - 27.01.2020 - மாலை 06.00 மணி 

No comments:

Post a Comment