Thursday, July 31, 2014

15 Things You Should Not Refrigerate

Refrigeration goes a long way towards preserving food but for some foods refrigeration can actually lessen the flavor, change the texture, and occasionally even cause the food to spoil at a faster rate. Here are some of the items that you should never refrigerate.
Bread – There are some people who hold fast to the belief that bread will keep longer in the fridge. These people are also eating some very dried out bread. It is perfectly fine to freeze bread, but keeping it in the fridge will cause it to very quickly dry out.
onion-fridge
Onions – Onions need to be kept in an area that allows air circulation. Needless to say the refrigerator does not fit that description. You should also keep them away from the potatoes as this will cause the onions to rot.
Potatoes – Refrigeration is a sure-fire way to kill the flavor of potatoes. Instead you want to store potatoes in a dry paper bag, but not a plastic bag as this promotes moisture and mold.
Avocado – Avocados need to be ripe before they are refrigerated. Once ripe, they will last for up to about a week in the fridge. It is best to refrigerate the whole whole avocado, to keep it from browning when exposed to air.
Hot Sauce – You can actually store hot sauce, along with various other condiments such as Worcestershire sauce, ketchup, and sriracha, outside of the fridge and in a pantry for up to three years.
Tomatoes – If you want to obliterate all of the flavor and texture of a good tomato then refrigerate it. If you want your tomatoes to ripen faster, however, store them out of the fridge in a paper bag.
coffee-refridge
Coffee – When you refrigerate or freeze coffee you are actually going to get a drastically different flavor. This is due to condensation. This is true for both coffee beans and coffee grounds. The best way to store coffee is in an air tight container in your pantry.
Winter Squashes – Whether it is an acorn squash, a butternut, or a spaghetti squash you will get far more flavor and enjoyment if you leave it in the pantry. On top of that the squash will last about a month or longer out of the fridge.
Oils – When you put oils, whether it is olive oil or vegetable oil, in the fridge they will actually get thick and begin to look murky and cloudy. In fact, the only oils that you must refrigerate are nut based oils. You are best simply keeping your oils in the pantry.
Garlic – If you keep garlic in the fridge then you are drastically reducing the lifespan of that garlic’s usability. This is because refrigeration reduces the flavor of the garlic and the refrigerated environment can actually cause mold to develop. You want to store garlic loose. After you break the head of the garlic you want to use it within ten days.
Honey – If you store honey in the fridge you are going to end up with a thickened, hardened, crystallized mess. You can store honey outside of the fridge and it will stay good for almost indefinitely.
honey-refridge
Melons – If you want to give melons the best possible flavor then you need to store them out on the counter at room temperature. This helps to keep the antioxidants intact. It does need to be said, however, that you can store melon in the fridge for three to four days after it has been cut into pieces.
Fruits – Many fruits such as berries, peaches, apricots, nectarines, and apples should be left out of the fridge and kept on a counter in order to let them ripen. If you refrigerate these fruits you will find that the flavor is greatly diminished.

Non Food Items:

Oddly enough there are plenty of non food items that can be preserved through refrigeration as well. However, as with food, there are some items you should never have refrigerated.
battery-fridge
Batteries – There is a myth that storing batteries in the fridge will help them last longer. However too much cold and too much heat can both cause batteries to actually lose power at a faster rate.
Nail Polish – Refrigerating nail polish will actually cause the polish to thicken. It also changes the chemicals. The best way to store nail polish is always at room temperature and out of direct sunlight

இயற்கை மருத்துவம்

வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமடையும். மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் அனைத்து வகையான காய்ச்சலும் சரியாகும். நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டையாக செய்து தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் எலும்புக் காய்ச்சல் குணமடையும்.

அகத்தி மரப்பட்டையை காஷாயமாக காய்ச்சி குடித்தால் அம்மை காய்ச்சல் குணமாகும். ஓமவல்லி இலை காம்பு கஷாயம் மற்றும் ஆடாதோடா இலை கஷாயம் குடித்தால் சளிக்காய்ச்சல் குணமாகும். பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் உள்ளிட்டவைகளை சேர்த்து கஷாயமாக காய்ச்சி குடித்தால் நச்சு காய்ச்சல் தீரும். புன்னைப்பூவை உலர்த்தி பொடியாக்கி, ஒரு சிட்டிக் பவுடரை தினமும் காலை மற்றும் மாலையில் சாப்பிட்டால் டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.

முருங்கை பட்டையின் சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் தீரும். நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு உள்ளிட்டவைகளை மென்று விழுங்கி வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும். 100 கிராம் உருளையில் 100 மி.கி. கோலின் உள்ளது. கோலின் என்பது மூளையிலுள்ள மிக முக்கியமான நியூரோ டிரான்ஸ்மீட்டர். கரைகிற மற்றும் கரையாத நார்ச்சத்து கொண்ட தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின்னர் பசும்பால் குடித்தால் ஆண்மை பெருகும். படை, தேமல், மீது வெங்காயத்தின் சாற்றை பூசி வந்தால் படை மற்றும் தேமல் மறைந்து விடும். திடீரென மயக்கம் ஏற்படும் போது வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் மயக்கம் தெளியும். வெங்காய சாற்றையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். வெங்காயத்தை ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். 

வெங்காயம், அவரை இலை ஆகிய இரண்டையும்  சேர்த்து சாப்பிட்டால் வந்தால் ஆசன கடுப்பு நீங்கும். கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருக்க கேரட் அதிகமாக சாப்பிடவேண்டும்.  வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்பட்டால் கேரட்டை துருவி பச்சடி செய்து சாப்பிடலாம். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு. தொற்று நோய் நமக்கு வராமல் தடுக்கிறது. சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளை சரிபடுத்தும் சக்தி கேரட்டிற்கு உள்ளது. உருளைக்கிழங்கில் உள்ள ரிuளீஷீணீனீவீஸீமீ ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் பி 6, இதய நோய்கள் இருப்பதை உணர்த்துகிற லீஷீனீஷீ நீஹ்stமீவீஸீமீஐக் குறைக்கிறது. பி 6, மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயங்களைக் குறைக்கிறது. மன அழுத்தத்தை பேலன்ஸ் செய்ய உதவுகிறது.    பேக் செய்யப்பட்ட 110 கிராம் உருளைக்கிழங்கில் 21 சதவிகித வைட்டமின்கள் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, உருளைக்கிழங்கின் நன்மைகளைப் பெற பேக்கிங் முறையே சிறந்தது. மிக முக்கியமான அமினோ அமிலமான லைசீன் கொண்டது.

உலகின் முதல் கப்பல்



உலகின் முதல் கப்பலையும் மிகப் பெரிய கப்பல்படையும் வைத்திருந்தவன் தமிழன்.ஆண்ட தமிழினம் அடங்கி மடிவதா ?
தென் பசிபிக் மாகடலில், ஆஸ்திரேலியா கடல் பகுதியில் ஆழக்கடல்அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குகப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் அக்கப்பல் தமிழர்களுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. உலகில் உள்ள கப்பல் மற்றும் கப்பல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களை காண முடிகிறது. நாவாய் மருவி நேவி (Navy) என்று ஆங்கிலத்தில் அழைக்கபெறுகிறது.
தமிழில் கடலுக்கு மட்டுமே 200க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாக கூறப்படுகிறது. (எ-கா) அரலை, அரி, அண்மைக்கடல், அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழக்கடல், ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கரைக்கடல், காயம், கலி, கார்கொள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நித்தம், நீந்து, நீரகம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என கடல் என்ற சொல்லுக்கு இது போன்ற பல சொற்களை கடல் பழங்குடிகளான நம் மீனவ மக்களிடமும் நம் இலக்கியங்களிலும் அறியலாம்.
உலக கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கிரகாம் ஹான்காக் பூம்புகார் கடலில் ஆரய்ச்சி செய்து பூம்புகார் என்ற நகரம் கடலில் மூழ்கியுள்ளதையும், இவை 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறியுள்ளார். இவர் கடலில் புதையுண்ட பூம்புகாரின் அறிய ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளார். மற்றொரு இங்கிலாந்து அறிஞர் கிளன் மில்னே இதையே கூறுகிறார். இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைகழகம் உறுதி செய்துள்ளது.
தமிழன் உலகெங்கும் பரவி இருந்தான் என்பதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகளை காண முடியும். “கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலையும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன” என்கிறார் கடல்சார் தமிழியல் ஆய்வாளர் திரு. ஒடிசா பாலு அவர்கள். (எ-கா) தமிழா-மியான்மர், சபா சந்தகன் – மலேசியா, கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா, கடாலன் – ஸ்பெயின், நான்மாடல், குமரி,- பசிபிக் கடல், சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ, திங் வெளிர்- ஐஸ்லாந்து, கோமுட்டி-ஆப்ரிக்கா என்பவை சில உதாரணங்கள்.நண்பர்களே! நம்ம வரலாறு எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள்.

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணம்

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள்மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.


"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன். பெண்கள் கண்ணிய மானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப் ட்ருக்கிறது" 

என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

Wednesday, July 30, 2014

ஜலதோஷத்தை போக்கும் துளசி ரசம்

ஜலதோஷத்தை போக்கும் துளசி ரசம்

தேவையான பொருட்கள் :

துளசி இலை - ஒரு கப் 
மிளகு - 2 ஸ்பூன் 
சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு ஸ்பூன் 
தனியா - 1 ஸ்பூன் 
புளி - எலுமிச்சை அளவு 
பெருங்காயத்தூள் - சிறிதளவு 
கடுகு, எண்ணெய் - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

• துளசியை தனியாக அரைத்து  கொள்ளவும். 

• மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

• புளியை கரைத்துக் அதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.. நன்றாக கொதி வந்தததும் அரைத்து வைத்துள்ள தனியா பருப்பு கலவையை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

• கடைசியாக அரைத்து வைத்துள்ள துளசியை போட்டு நுரை வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். 

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

• இந்த துளசி ரசம் ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

தெரிந்துகொள்வோம்

ஹதீஸ்-பாங்கு சொல்பவர்

முஅத்தின் (பாங்கு சொல்பவர்) “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்)என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்)என்று சொல்லுங்கள்.
பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள்.
பின்பு அவர், “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள்.
பின்பு அவர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்”(தொழுகையின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்”(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்.
பின்பு அவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்”(வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்”(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்.
பின்பு அவர் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்)என்று சொல்லுங்கள்.
பின்பு அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று சொன்னால் நீங்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்”(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள்.
உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)                                                          நூல்: முஸ்லிம் 629