Sunday, February 26, 2017

கலிமா தய்யிபா - ஈமான்

٥- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَاقَالَ عَبْدٌ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ قَطُّ مُخْلِصاً إِلاَّ فُتِحتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّي تُفْضِيَ إِلَي الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكَبَائِ
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب دعاء أم سلمة ٢، رقم:٣٥٩ ٠.

Saturday, February 25, 2017

பத்தைத் தடுக்கும் பத்து

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
1. ''சூரத்துல் ஃபாத்திஹா'' ரப்பின் கோபத்தை தடுக்கும்.
2. ''சூரா யாஸீன்'' கியாமத்து நாளில் தாகத்தைத் தனிக்கும்.
3. ''சூரா துகான்'' கியாமத்து நாளின் அமளியைத் தடுக்கும்.
4. ''சூரா வாகிஆ'' வறுமையைத் தடுக்கும்.

Sunday, February 19, 2017

மாமனிதர் காமராசர்

ஐயா காமராசரைப் பார்க்க "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும்
சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது காமராசர் சோ-வைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம்
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்,ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா
என்று கேட்டுள்ளார்.

Friday, February 17, 2017

கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர்

கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம்.

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:


விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

Friday, February 10, 2017

முதலமைச்சராக காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்!
விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால் மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார்.
அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார்.

Saturday, January 28, 2017

காமராஜர் ஒரு சகாப்தம்,

காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்..தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..