Sunday, February 26, 2017

கலிமா தய்யிபா - ஈமான்

٥- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَاقَالَ عَبْدٌ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ قَطُّ مُخْلِصاً إِلاَّ فُتِحتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّي تُفْضِيَ إِلَي الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكَبَائِ
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب دعاء أم سلمة ٢، رقم:٣٥٩ ٠.
“ஓர் அடியான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனத் தூய்மையுடன் சொல்லும்போது, சொல்பவர் பெரும் பாவங்களிலிருந்து விலகியிருக்கும் நிலையில் இக்கலிமாவுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு அது நேரடியாக அர்ஷ் வரை சென்றடையாமல் இருப்பதில்லை. (உடனடியாக இக்கலிமா ஏற்றுக் கொள்ளப்படுகிறது)’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
தெளிவுரை:- மனத்தூய்மையுடன் சொல்வது என்பதன் பொருள், அதை மொழிவதில் எவ்வித முகஸ்துதியோ, நயவஞ்சகமோ இருக்கக் கூடாது என்பதாகும். கலிமா விரைவில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பெரும் பாவங்களை விட்டும் விலகியிருப்பது நிபந்தனையாகும். எனினும் பெரும் பாவங்களுடன் இந்தக் கலிமாவைச் சொன்னாலும் அதற்குரிய நன்மையும் பலனும் கிடைத்தே தீரும். (மிர்காத்) -- Via Munthakhab Ahadees.

No comments:

Post a Comment