Saturday, May 19, 2018

அரசியல் என்பது சாக்கடையா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே 
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: சவூதி அரேபியா என்ற இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.

'ஹுஸ்னுள் ஹாத்திமா''

                                                         அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !                                                         எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!
மஸ்ஜிதுன் நபவீ ''யில் ஒரு பெண்ணின் ஜனாஸா'' வந்து விட்டது.

நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.
அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலா நேரில் வந்து, "அந்த பெண்ணின்
ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம்,
அப்படி தொழ வைக்க வேண்டுமானால் அந்த பெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான் " என்று உத்திரவிடுகிறார்.
நபி ஸல் அவர்கள் நேராக சென்று கபுரை காண்கின்றார்கள்.
''சுப்ஹானல்லாஹ்'' கப்ரு குழிக்குள் பாம்பும் ,தேளும் ,விஷ ஜந்துக்களும் நிறைந்து காணப்பட்டது .அதைக்கண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் கவலையே உருவாக வருகின்றார்கள்.

Thursday, May 10, 2018

குளத்து நீரை கூஜாவில் அடைத்த ஹாஜா!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமின் பக்கம் மனிதர்களை அழைப்பதற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற ஊருக்கு வந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மிக நெருங்கிய "முரீது" சிஷ்யர்களும் இருந்தார்கள்.
அக்காலகட்டதில் அஜ்மீர் அதிபதி முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.அந்த மன்னனின் பெயர் பிரதிவிராஜ்.

Tuesday, May 1, 2018

பரக்கத் நிறைத்த பராஅத் இரவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
இன்றிரவு ஷஃபான் 15 ம் நாள் புனித "பராஅத்" இரவாகும். 
'ஷஃபான் மாதம் என்னுடையது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஷஃபான் மாதம் 15 ம் நாளைத்தான் நிஸ்பு ஷஃபான் என்று அழைக்கிறார்கள்.
இந்த இரவில்தான் வரும் சென்ற வருடத்தின் அமல்களின் கணக்குகள் முடிவுக்கு வந்து இந்த வருடத்திற்குள்ள புதிய கணக்கு (அமல் நாமா) இறைவனால் நிர்ணயிக்கப்படுவதாகவும், இவ்வருடத்திற்குள்ள இறப்பு, பிறப்புகள் எழுதப்படுவதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன.

Monday, April 30, 2018

யூசுஃபிய்யாவின் பட்டமளிப்பு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
29-04-2018 அன்று நடைபெறும் திண்டுக்கல் யூசுஃபிய்யாவின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவோரை வாஞ்சையுடன் வரவேற்கிறோம்.

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது

Wednesday, April 25, 2018

கோடி நன்மைகளை அதிகப்படுத்தி தருகிறது குர்ஆன்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே 
#அகில இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு 'எனக்குத் தெரிந்த இஸ்லாம்' என்கிற தலைப்பில் கேரளாவைச் சார்ந்த 'ஃபோரம் ஃபார் ஃபெய்த் அண்ட் ஃப்ராட்டர்னிடி' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசை வென்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி.
பேனா முனை போல வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் சான்றிதழ், புத்தகங்கள் மற்றும் 25000 ரூபாய் ரொக்கமும் அடங்கிய பரிசு இது.