Tuesday, July 22, 2014

தெரிந்துகொள்வோம்

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்....
* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.
* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.
* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.
* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.
* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.
எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள்
மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.
* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.
* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.
* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது
* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

No comments:

Post a Comment