உடல் சூட்டைத் தணிக்கும் முருங்கைப்பூ!
முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும்.
முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன.
கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல் அவிக்க வேண்டும்.பின்னர் இதை பிழிந்து கொடுக்க வயிற்று வலி குணமாகும்.
நன்கு காய்ச்சிய பசுவின் பாலில் நாலைந்து முருங்கைப் பூக்களைப் போட்டு நாள்தோறும்- சாப்பிட்டு வந்தால் தாது நல்ல புஷ்டி பெறும்.
முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, பசு வெண்ணெய், ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மேகநோய் எனப்படும் பெண் சீக்கு குணமாகிவிடும்.
மேநோய்க்கு வேறொரு பக்குவமும் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவை சாறெடுத்துக்கொள்ள வேண்டும்.இந்தச் சாற்றில் அரைக்கால் படி அளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் கூட்டி நூறு கிராம் அளவுக்கு வெல்லம் சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டாலே மேகநோய் தணிந்து விடும்.
உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ நல்ல முறையில் பயன்படும். முருங்கைப்பூவை கஷாயம் முறையில் பக்குவம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு உடனேயே சரிபடும்.
பெண்களுக்கு பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிராபத்து ஏற்படக்கூடும். இதற்கு முருங்கைப்பூ பெரிதும் பயன்படுகிறது. முருங்கைப்பூவை நன்றாக அரைத்து ஒரு தேங்காய் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பசுவின் பாலும் தேங்காய் பாலும் படிக்கு அரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 25 கிராம் வெல்லத்தை கூட்டி எல்லாவற்றையும் சேர்த்து காய்ச்சி இலேகிய பதத்தில் இறக்கிவிடவேண்டும். இந்த லேகியத்தை எலுமிச்சை அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடவேண்டும். இவ்வாறு ஒரு வருடம் சாப்பிட்டால் பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு குணமாகிவிடும்

No comments:
Post a Comment