Sunday, August 24, 2014

ஹதீஸ்-யாசீன் சூரா

யாசீன் சூரா பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்
அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்குவரை உண்டு. "அலிஃப் லாம் மீம்'' என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்து மீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : திர்மிதீ (2835)
இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சில அத்தியாயங்களுக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக சில செய்திகள் உள்ளன. அவைகள் பெரும்பாலும் இட்டுக்கட்டப்பட்டதாகவும் பலவீனமான செய்திகளாகும் இருக்கின்றன. குறிப்பாக திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது.
திருக்குர்ஆனின் இதயம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியததற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை பதிவு செய்கிறான்.
நூல்கள் : திர்மிதீ (2812),
பாவங்கள் மன்னிக்கப்படும்
யார் இரவில் யாஸின் சூராவை ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார், யார் துகான் அத்தியாயத்தை இரவில் ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்
அல்லாஹ் ஓதிய அத்தியாயம்
அல்லாஹ் தஆலா இந்த வானம் பூமி படைக்கப்படுவதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன் யாஸீன் அத்தியாயத்தையும் தாஹா அத்தியாயத்தையும் ஓதினான். மலக்குமார்கள் (இந்தக்) குர்ஆன் வசனங்களை கேட்டவுடன் இந்த அத்தியாயம் எந்த உம்மத்திறகு இறங்குகிறதோ அந்த உம்மத்திற்கு சுபச்செய்தி உண்டாகுவதாக! எந்த உள்ளம் இதை சுமக்கிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவாக! எந்த நாவு இதை ஓதுகிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவதாக! என்று சொன்னார்கள் என நபிகளார் கூறினார்கள். (நூல் : தாரமி (3280)
தேவைகள் நிறைவேற்றப்படும்
யார் பகலின் ஆரம்ப நேரத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய தேவைகள் நிறைவேற்றப்படும்
பெற்றோர் பாவங்கள் மன்னிக்கப்படும்
யார் தன்னுடைய தாய், தந்தையர்களின் ஒருவரின் கப்ரையோ அல்லது இருவரின் கப்ரையோ வெள்ளிக்கிழமை தோறும் சந்தித்து அங்கு யாஸீன் அத்தியாயத்தை ஓதினால் ஒவ்வொரு ஆயத் அல்லது எழுத்து அளவுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூபக்கர் (ரலி)
பிரசவ வேதனை குறையும்
யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், யார் பசியுள்ள நிலையில் அதை ஓதுவாரோ அவர் வயிர் நிரம்புவார், யார் வழிதவறிய நிலையில் ஓதுவாரோ அவர் வழியை அடைந்து கொள்வார், யார் பொருளை தவற விடுவாரோ அதை அவர் பெற்றுக்கொள்வார், உணவு குறைந்துவிடும் என பயந்து உணவிருக்குமிடத்தில் அதை ஓதுவாரோ அவர் அதை போதுமானதாக பெற்றுக்கொள்வார். இறந்தவரிடத்தில் ஓதினால் வேதனை இலேசாகும். பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணிடம் ஓதினால் அவருடைய பிரசவம் லேசாகும். மேலும் யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் குர்ஆனை பதினொரு தடவை ஓதியவர் போன்றவராவார். ஒவ்வொன்றுக்கும் இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் யாஸீன் ஆகும்
முழுக் குர்ஆன் ஓதிய நன்மை
யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். மேலும் அது முழு குர்ஆனை ஓதியதற்கு சமமாகும் என்று ஹஸன் பஸரி அவர்கள் கூறுகிறார்கள்.
இறந்தவருக்கு ஓதுங்கள்
இறக்கும் நிலையில் உள்ளவரிடம் யாஸீன் அத்தியாயத்தை யார் ஓதுவாரோ அவருடைய வேதனைகள் குறைக்கப்படும் என்று அபூதர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment