தேவையானவை:
கொத்தமல்லி - 1 கட்டு
கோதுமை மாவு - 50 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையானது.
கோதுமை மாவு - 50 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையானது.
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொத்தமல்லியை ஆய்ந்து பொடியாக நறுக்கி வதக்கி அரைக்க வேண்டும். கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய்ப்பொடி, தக்காளிச்சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்த கொத்தமல்லி விழுதைச் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டுக் கரைக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, காய்ந்ததும் கரைத்த மாவை ஊற்றி மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
No comments:
Post a Comment