Sunday, August 10, 2014

கேழ்வரகு புட்டு

கேழ்வரகு புட்டு
தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், தேங்காய் - அரை மூடி, பனை வெல்லம் - 100 கிராம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து புட்டு மாவுப் பதத்துக்கு, உதிரியாகப் பிசைந்துகொள்ளவும். குழாய் புட்டுப் பாத்திரத்தில், துருவிய தேங்காயை வைத்து, அதன் மேல் பிசைந்துவைத்துள்ள கேழ்வரகு மாவை வைக்கவும். பனை வெல்லத் தூள், தேங்காய்த் துருவல் என அடுக்கடுக்காகச் சேர்க்க வேண்டும். புட்டுக் குழாயில் மாவை நன்கு இறுக்கமாக அழுத்திவைத்து வேகவைக்கவும். ஆவி வந்ததும் இறக்கி, சூடாகப் பரிமாறலாம்.
பலன்கள்: கேழ்வரகில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம். இதயம் சார்ந்த பிரச்னைகள் அனைத்துக்கும் இந்தச் சத்துக்கள் மிகவும் நல்லது. தேங்காயில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது.

No comments:

Post a Comment