Thursday, September 18, 2014

முருங்கைக்கீரை அடை

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி - 21/2 கப் 
கடலைப் பருப்பு - 1/4 கப் 
உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
முருங்கைக்கீரை - 1 கட்டு 
வெங்காயம் - 3 
தேங்காய் துருவல் - 1/2 கப் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 8 
பெருங்காயம் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

* முருங்கைக்கீரையை சுத்தமாக ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். 

* வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

* அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

* பருப்புகளை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 

* அரிசியும் பருப்பும் ஊறியப்பின் அதனுடன் சீரகம், மிளகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

* அரைத்த மாவில் உப்பு, தேங்காய் துருவல், வெங்காயம் மற்றும் முருங்கைக் கீரை சேர்த்து கலக்கவும். 

* அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கனமான சிறிய அடைகளாக ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்த பிறகு எடுக்கவும். 

* சுவையான முருங்கைக்கீரை அடை தயார்.

No comments:

Post a Comment