Thursday, September 18, 2014

ஓமவல்லித் துவையல்.

ஓமவல்லித் துவையல்.
தேவையானவை: ஓமவல்லி இலை - 25, புதினா - ஒரு கைப்பிடி, புளி - சிறு உருண்டை, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 8 பல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை சிவப்பாக வறுத்து, அதனுடன் மிளகாய் சேர்த்து வறுக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டைச் சேர்த்து வதக்கி, அதில் புதினாவையும் சேர்த்து வதக்கவும். இதனுடன், மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். பூண்டு வாசனை பிடிக்காதவர்கள், பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட ஏற்ற
சுவையான, சத்தான துவையல். 

No comments:

Post a Comment