Sunday, September 7, 2014

விக்கல் நிற்க

விக்கல் நிற்க இயற்கை வைத்தியம்
எட்டுத் திப்பிலி . ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகும் விடாவிடில் புத்தகத்தைச் சுட்டுப் போடு நான் தேரனுமல்லவே !
விக்கலுக்கு மருந்து இது.
* திப்பிலி 8 பங்கு; சீரகம் 10 பங்கு. இவற்றைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு, அப்படியும் நிற்காவிடில் புத்தகத்தை (மயிலிறகை ) சுட்டுச் சாம்பலைத் தேனில் குழைத்துச் சாப்பிட விக்கல் நிற்கும் என்கிறார் தேரச்சித்தர்.
* தொடர் விக்கல் நிற்க நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
* விக்கல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தால், பிரண்டையைத் தணலில் வாட்டி எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுக்கவும். அத்துடன் அரைத் தேக்கரண்டி தேனை விட்டு கலந்து சாப்பிட்டால், விக்கல் நின்று விடும்.
* விக்கல் நிற்க, ஒரு காகிதப் பையினுள் மூச்சை இழுத்து விடுங்கள்.
* சர்க்கரையை எடுத்து, சிறிது சிறிதாக வாயில் போட்டு சுவைத்தால் விக்கல் நிற்கும்.
* எலுமிச்சை சாற்றுடன், சிறிது சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
* சிறிது தேனை தனியாக சாப்பிட்டாலும் விக்கல் நிற்கும்.
* கொத்தமல்லி விதையை கஷாயம் போட்டு, சிறிது உட்கொண்டாலும் விக்கல் நிற்கும்.
* மயிறகின் சாம்பலுக்குச் சம அளவுக்கு, கருக்கி எடுத்த வெந்தயப் பொடியைக் கலந்துக் கொள்ளவும். இதில் கால் தேக்கரண்டி எடுத்து, தேனில் கலந்து உண்ண, விக்கல், வாந்தி, கக்கல் தீரும்.
புதினா இலையை காய வைத்து இடித்து அதனுடன் அரிசி, திப்பிலி பொடியையும் கலந்து அதில் தேக்கரண்டி தேன் சேர்த்து குழப்பி கொடுத்தால் விக்கல் நிற்கும்.
* புதினா இலையை காய வைத்து இடித்து அதனுடன் அரிசி, திப்பிலி பொடியையும் கலந்து அதில் தேக்கரண்டி தேன் சேர்த்து குழப்பி கொடுத்தால் விக்கல் நிற்கும்.

No comments:

Post a Comment