Sunday, September 7, 2014

பொன்மொழிகள்!!!

பொன்மொழிகள்!!!
1. உழைப்பின்றி உயர்பவர்களைத் திருடர்கள் என்றுதான் கூற வேண்டும். -காந்தி
2. உனது அறிவையும் ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள். -சாக்ரடீஸ்
3. மனோதைரியம் இல்லையேல் வாய்மை இல்லை. -மில்டன்
4. உழைப்பு என்றும் வீண்போகாது; உழைப்பிற்குத் தகுந்த பலன் ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்.
-நெப்போலியன் ஹில்
5. ஒரு தவறு செய்தபிறகு அதைத் திருத்தாதவன், இன்னொரு தவறு செய்தவனாவான்.
-கன்பூஸியஸ்
6. மனிதனின் ஆசைகள் எப்போதும் குறைவதில்லை. அது மனத்தின் பசி. -காண்டேகர்
7. எது நேர்மையான பாதையைக் காட்டுகிறதோ அதுவே உண்மையான அறிவு. -ஜேம்ஸ் ஆலன்
8. சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது நேரத்தை மிச்சப்படுத்துவது ஆகும். -பேகன்
9. நீயும் வாழு; பிறரையும் வாழ விடு. இதுவும் அகிம்சையின் தத்துவம்தான். -மகாவீரர்

No comments:

Post a Comment