Monday, September 15, 2014

சளி தொல்லை

சளி தொல்லையா கவலை வேண்டாம் :
1. எலுமிச்சம்பழம்:
ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான வெந்நீரில் சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சினை தீரும். எலுமிச்சைபழம் விட்டமின் சி நிறைந்தது. இது நோய்க்காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை குறைக்கிறது. மேலும் நோயின் காலத்தை குறைக்கிறது.

2. பூண்டு சூப்‍‍‍‍ :
மூன்று அல்லது நன்கு பூண்டு பற்களை நறுக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூப் தயாரிக்கலாம். சூப்பாக குடிப்பதால் நம் உடம்பிலுள்ள நச்சுப்பொருட்களை பூண்டு வெளியேற்றுவதுடன் காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. நான்கு துளி பூண்டு எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி வெங்காய சாறை சேர்த்து தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க சளி குணமாகும்.
3. இஞ்சி :
பத்து கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கப் தண்ணீருடன் கலந்து வேகவைத்து பின் அதனை வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி சர்க்கரை சேர்த்து சூடாக குடிக்க வேண்டும். இஞ்சி டீ தயாரிக்க சில துண்டுகள் இஞ்சியை தண்ணீரில் வேகவைத்து பிறகு டீத்தூளை சேர்க்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ள சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் குண‌மாகும்.
4.வெண்டைக்காய்:
பத்து கிராம் வெண்டைக்காயை அரை லிட்டர் தண்ணீரில் வேக வைத்து இறக்கிய பின் வரும் ஆவியை மூச்சு உள்ளிழுக்க வேண்டும். இதை நாளொன்று ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம். இது தொடர்ந்த வறட்டு இருமலுக்கும், தொண்டை கரகரப்புக்கும் நல்லது.
5.பாகற்காய்:
பாகற்காயின் வேரை விழுதாக அரைக்கவும். ஒரு தேக்கரண்டி இந்த விழுதுடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட சளி வ‌ராமல் இருக்கும்.
6.மஞ்சள் :
அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை 30மிலி வெதுவெதுப்பான பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பருக சளியும் தொண்டை எரிச்சலும் சரியாகும். முதலில் மஞ்சளை தணலில் காட்டி பின் மிதமான தீயில் பாலை சிறிது சிறிதாக கலக்க வேண்டும். மூக்கொழுகினால் சூடான மஞ்சளில் இருந்து வெளிவரும் ஆவியை சுவாசிக்க உடனடீ நிவாரணம் கிடைக்கும்.
7.மிளகு புளி ரசம்:
50மிகி புளியை 250மிலி தண்ணீரில் கரைத்து சில நிமிடம் கொதிக்க வைத்து பிறகு ஒரு தேக்கரண்டி மிளகுப்பொடியையும் ஒரு தேக்கரண்டி காய்ச்சிய வெண்ணெய்யையும் சேர்த்து இறக்கவும். ஆவிபறக்க இந்த ரசத்தினை ஒரு நாளைக்கு மூன்ருமுறை பருகவும். இதைக் குடித்த‌வுடன் கண்களிலும் மூக்கிலும் நீர் வரும் இதனால் மூக்கடைப்பு சரியாகும்
8.இஞ்சி :
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்
9. வெற்றிலை :
இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து, 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். அதனுடன், 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுடன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம்
10. மஞ்சள் :
சளி, இருமல் தொல்லை இருந்தால், பாலில் மஞ்சள் பொடி கலந்து சாப்பிடலாம். மூக்கில் அதிகமாக நீர் வடிந்தால், மஞ்சளை தீயில் வாட்டி அதன் புகையை நுகர்ந்தால், உடனடியாக பலன் கிடைக்-கும்
11 . கற்பூர வல்லி :
கற்பூர வல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

No comments:

Post a Comment