Wednesday, September 3, 2014

டின் (TIN) நம்பர்

ஒரு  வியாபாரம்  துவங்குவதிற்கு  டாக்ஸ்  அடையாள  என்  என்று  சொல்லப்படும்  டின்  தமிழக  அரசினால்  கொடுக்கப்படும்  சான்றிதழ்  தான்  டின்  நம்பர் (TIN NO).
டின் நம்பர்  ஏன்  வாங்க  வேண்டும்  ?

தமிழ்நாடு  மதிப்பு  கூட்டு  வரி  சட்டத்தின்  படி  உற்பத்தி  செய்யும்  அனனத்து  பொருளுக்கும் , குறிப்பிட்ட  ஒரு  சில  பொருட்களை தவிர  மற்ற  பொருட்களுக்கு  வரி  கொடுத்து  தான்  வாங்க  வேண்டும். வரி  வாங்கித்தான் விற்க  வேண்டும்.
ஒருவர் தொழில் தொடங்கவேண்டுமானால் மாவட்ட வணிகவரி மையத்தில் மனு செய்யவேண்டும் [ GOVERMENT OF TAMIL NADU COMMERCIAL TAXES DEPARTMENT ] 11 இலக்கம் கொண்ட Tin Number தருவார்கள் இது இந்தியா முழுவதும் தொழில் செய்ய பொருந்தக்கூடியதாக இருக்கும்.
 

மனு செய்யும் முறை பற்றி பார்ப்போம் :

1. நம் புகைப்படம்
2.ரேசன் கார்டு ஜெராக்ஸ்
3. PAN கார்டு ஜெராக்ஸ் [ Proprietor ]
4. சொத்து சம்மந்தப்பட்ட டாக்குமெண்டுஸ் ஜெராக்ஸ்
5. வாடகை ஒப்பந்த பத்திரம் ஜெராக்ஸ்
6. Form F  Form A பூர்த்தி செய்யவேண்டும்
7. Rs. 500/- ரூபாய்க்கு DD எடுக்கவேண்டும்
8. ஏற்கனவே TIN NO உள்ளவர்களின் பரிந்துரை  கடிதம் 2 வேண்டும்.
இவற்றை சமர்பித்தால் ஒரு வாரத்தில் நம் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் அதன் பிறகுதான் Bank A/C திறக்க முடியும் எல்லாம் முடிந்தவுடன் வியாபாரத்தை துவங்கலாம்.

No comments:

Post a Comment