Sunday, October 12, 2014

சென்னை வந்த விமானத்தில் ஹஜ் பயணம் சென்று திரும்பிய திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஹாஜி அப்துல்லா மாரடைப்பால் மரணம்!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் 324 பயணிகளுடன் நேற்று (அக்டோபர் 09 தேதி) காலை சென்னைக்கு புறப்பட்டது. காலை 9.40 மணியளவில் சென்னை வான்வெளியை நெருங்கியது.
இதில், திருவள்ளூரை சேர்ந்த அப்துல்லா (50) என்பவர் உள்பட பலர் ஹஜ் புனிதா யாத்திரை சென்று திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அப்துல்லாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் வந்த யாத்திரை பயணிகள், விமான பணிப்பெண்களிடம் கூறினர். அவர்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஓடுபாதை அருகே மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். 10 மணியளவில் விமானம் தரை இறங்கியது. உடனே மருத்துவ குழுவினர் உள்ளே சென்று அப்துல்லாவை பரிசோதித்தனர். இதில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்து விமான நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
வழக்கமாக ஜெட்டாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் காலை 10 மணிக்கு சென்னை வந்து, 10.45 மணிக்கு மீண்டும் ஜெட்டா புறப்பட்டு செல்லும். பயணி ஒருவர் இறந்ததால் ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்தனர். அதன் பின், 2 மணிநேரம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு, விமானம் ஜெட்டா புறப்பட்டு சென்றது.



No comments:

Post a Comment